கவர்ச்சி சரிப்படாது! சொல்கிறார் ஷிவதா



‘நெடுஞ்சாலை’யில் அறிமுகமான ஷிவதா, நம்பிக்கைக்குரிய கேரள வரவாக இருக்கிறார் அவரிடம் பேசியதில் இருந்து...
எப்படி அறிமுகமானீங்க?

கேரளாவில் இருக்கும் அங்கமாலியைச் சேர்ந்தவங்க நாங்க. பிறந்தது திருச்சியில். இருப்பது சென்னையில். பி.டெக் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சிருக்கேன். பி.ஜி பண்ண ஆசைப்பட்டேன். அதுக்குள்ள சினிமா சான்ஸ் வந்தது. ‘கேரளா கஃபே’ படத்தில் சின்ன கேரக்டரில் நடிச்சேன். எனக்கு ஜோடி சீனிவாசன். அப்புறம் பாசில் இயக்கிய ‘லிவிங் டுகெதர்’ படத்தில் ஹீரோயினா அறிமுகமானேன்.

‘நெடுஞ்சாலை’யில் எப்படி?
இந்தப் படத்தை கிருஷ்ணா ஆரம்பிச்சப்ப, என் போட்டோஸ் பார்த்துட்டு கேட்டாங்க. இது நல்ல வாய்ப்புன்னு எனக்குத் தோணுச்சு. உடனே ஒப்புக்கிட்டேன். தமிழில் முதல் படமா இருந்தாலும், கனமான ரோல். என்னை நம்பி டைரக்டர் கொடுத்த வாய்ப்பை நல்லா பண்ணி யிருக்கேன்னு தோணுது.  கிளாமரா நடிப்பீங்களா?
என் தோற்றம் அதுக்கு சரிப்பட்டு வருமான்னு தெரியலை. மாடர்ன் டிரெஸ்சில் நடிப்பேன்.

 தேவா