எஸ்.டி.விஜய் மில்டன்



திருநெல்வேலி வடக்கன் குளத்தைச் சேர்ந்தவர். முதலில் ஆபாவாணனிடமும், பிறகு எஸ்.சரவணனிடமும் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

'ப்ரியமுடன்...’ படத்தில் ஒளிப்பதிவாளராகி, ‘கோலிசோடா’ வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் என 25 படங்கள் முடித்துள்ளார். ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலிசோடா’ படங்களை இயக்கியுள்ளார். அடுத்த இயக்கம், ‘இடம் மாறி இறங்கியவன்’.

இவரது தந்தை விஜய்ராஜ். ‘இதயம் தேடும் உதயம்’, ‘சித்திரம் பேசுதடி’ படங்களை இயக்கினார். ரிலீசாகவில்லை. தந்தையை கவுரவிக்கும் வகையில், ‘மில்டன் சீனி’ என்ற இயற்பெயரை, ‘எஸ்.டி.விஜய் மில்டன்’ என்று மாற்றிக்கொண்டார்.

‘கொலுசுகள் பேசக்கூடும்’ கவிதை நூலை வெளியிட்ட இவர், அடுத்து ‘மழை முடிந்த பிறகு’ நூலை வெளியிடுகிறார். இவரது மனைவி, மெர்சி. 4வது, 1வது படிக்கும் மகன்கள் ஆண்டன் சே, ஹாலன் ஜெப்ரி உள்ளனர்.  

‘கோலிசோடா’ படத்தை ‘ரஃப் நோட்’ நிறுவனத்துக்காக தயாரித்த இவரது தம்பி பாரத், லிங்குசாமியிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றுகிறார். அடுத்து ‘கோலிசோடா’ 2ம் பாகம் தயாரிக்கிறார்.

 தேவராஜ்