திரையுலகை கலக்கும் 50 காதல் ஜோடிகள்



காதல் இல்லாத உலகை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. சாதாரண காதலர்களை விட, சினிமா துறையைச் சேர்ந்த காதலர்கள் ரசிகர்களால் கவனிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் மக்கள் கவனத்தை ஈர்த்த சில காதல் ஜோடிகளின் தொகுப்பு இது.

1) சஞ்சனா சிங்கிற்கு மும்பையில் பாய் பிரெண்ட் இருந்தார். சினிமாவில் நடிக்கும் சஞ்சனா கவர்ச்சியாக நடிக்கக்கூடாது என்று முரண்டு பிடிக்கவே, காதலை முறித்துக்கொண்டார்.
2) இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், சார்மி. இவர்கள் காதல், 'இருக்கு. ஆனா, இல்ல' என்ற கதையாகவே இருக்கிறது. முன்பு மம்தா மோகன்தாசுடனும் தேவிஸ்ரீ பிரசாத் கிசுகிசுக்கப்பட்டார்.

3) ஆர்யா, அனுஷ்கா ஜோடி. 'இரண்டாம் உலகம்' மூலம் இணைந்த இவர்கள், இப்போது வெவ்வேறு படங்களில் நடித்தாலும், சென்னை மற்றும் ஐதராபாத்திலுள்ள நட்சத்திர ஓட்டல்களில் ரகசியமாக சந்தித்து காதல் வளர்க்கிறார்கள்.
4) ஆர்யா, நயன்தாரா. 'இல்ல. ஆனா, இருக்கு' என்ற கதை இவர்களுடையது. ஆனால், ஆர்யாவின் வீட்டுக்கு அடிக்கடி விசிட் அடிக்கிறாராம் நயன்தாரா.
5) அஞ்சலியின் காதல் ரகசியமானது. காதலனுடன் திருமணமாகி விட்டதாகவும், வெளிநாட்டில் பங்களா வாங்கிக் கொடுத்திருப்பதாகவும் தகவல் பரவியுள்ளது.
6) விதார்த், மனிஷா யாதவ். 'பட்டைய கௌப்பணும் பாண்டியா' படத்தில் நடித்தார்கள். அதற்குள் கிசுகிசுவில் சிக்கித் தவிக்கிறார்கள்.

7) அபி சரவணன், காயத்ரி. 'கேரள நாட்டிளம் பெண்களுடனே' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே காதல் பற்றியதால், நிஜ வாழ்க்கையிலும் இணை சேர விருக்கிறார்கள்.
8) கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராவும், முன்னாள் ஹீரோயின் ரதியின் மகன் தனுஜ் வில்வானியும் மும்பையில் காதல் வளர்க்கிறார்கள். இதற்கு கமலின் முன்னாள் மனைவி சரிகா பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
9) தமன்னாவுக்கும், பாலிவுட் இயக்குனர் சாஜித் கானுக்கும் காதல் என்று கிசுகிசு பரவிய மறுநாளே, 'தமன்னா என் தங்கை மாதிரி' என்று சொல்லிவிட்டார் சாஜித்.
10) 'மாலினி 22 பாளையங்கோட்டை' படத்தில் நடித்த நித்யா மேனனும், கிரிஷ் ஜே.சத்தாரும் காதல் வலையில் சிக்கியதாகக் கூறப்பட்டது. பிறகு அது பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று தெரிந்தது.
11) 'பாண்டிய நாடு' படத்தைத் தொடர்ந்து 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் ஜோடி சேர்ந்ததால் விஷால், லட்சுமி மேனன் இடையே காதல் மலர்ந்ததாக தகவல். இருவரும் அதை மறுத்துள்ளனர்.
12) 'அடித்தளம்', 'வேல்முரு கன் போர்வெல்ஸ்' படங்களில் ஜோடி சேர்ந்த மகேஷ், ஆருஷி நெருக்கமாகப் பழகுகிறார்களாம்.
13) இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருடன் அமலா பால் பற்றி அடிக்கடி காதல் கிசுகிசு வருகிறது. இதை மூவரும் மறுத்துக் கொண்டிருக்கின்றனர்.
14) மலையாள முன்னணி ஹீரோ திலீப்பும் காவ்யா மாதவனும் காதலித்து வருவதாகவும் விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் தெரிகிறது.
15) மேக்னாராஜ் மலையாள நடிகர் அனூப் மேனனை காதலிக்கிறார். ஆனால், தன் மகள் யாரையும் காதலிக்கவில்லை என்று, மேக்னாவின் தந்தை சுந்தர்ராஜ் கூறியுள்ளார்.
16) பிரியாமணியுடன் இணைத்துப் பேசப்படாத மலையாள மற்றும் தெலுங்கு இளம் ஹீரோக்களே கிடையாது. என்றாலும், தொழிலதிபரைக் காதலிப்பதாகவும், நேரம் வரும்போது அதை அறிவிப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார் பிரியாமணி.
17) லட்சுமி ராய்க்கும், பிரபல தொழிலதிபரின் மகனுக்கும் காதல் தொடர்கிறது. திருமணம் செய்யும்போது அதுபற்றி அறிவிப்பதாக லட்சுமி சொல்கிறார்.
18) காஜல் அகர்வாலும், ஐதராபாத் தொழிலதிபர் ஒருவரும் காதலிக்கிறார்கள். ஆனால், 'நாங்கள் காதலிக்கவே இல்லை' என்று சொல்கிறார் காஜல்.
19) இயக்குனர் செல்வராகவனை காதலித்து மணந்து, பிறகு விவாகரத்து செய்த சோனியா அகர்வால், கன்னட நடிகர் 'நான் ஈ' சுதீப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல் பரவியிருக்கிறது.
20) கன்னட ஹீரோ 'துனியா' விஜய்யுடன் சுபா புஞ்சாவுக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும், பிறகு அவர்கள் பிரிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
21) கர்நாடகா அரசியல்வாதி ஒருவருடன் ஹரிப்பிரியா நெருக்கமாக இருப்பதாக தகவல் பரவியுள்ளது.
22) இலங்கை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டதாக பூஜா பற்றி அடிக்கடி செய்தி. ஒவ்வொரு முறையும் அதை அவர் மறுத்துக்கொண்டே இருக்கிறார்.
23) தெலுங்கு ஹீரோ நிகிலை காதலிப்பதாக 'சுப்ரமணியபுரம்' சுவாதி பற்றி தகவல்.
24) மலையாள நடிகர் அஜய்கோஷ், 'ராட்டினம்' சுவாதி இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
25) ஓவியா மீது ஒரு கண் வைத்த விமல், அவருக்கு சிபாரிசு செய்து பட வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்ததாகவும், பிறகு விமல் வீட்டில் பிரச்னை வெடித்ததால், அவர்களுடைய நட்பு முறிந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
26) 'வெற்றி' படத்தில் நடித்தபோது அருந்ததியும், அதன் ஹீரோவும் (பாடகர் மனோவின் மகன்களில் ஒருவர்) காதல் வலையில் சிக்கிவிட்டனர் என்றும், இப்போது கூட அவர்கள் காதல் தொடர்வதாகவும் நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.
27) பாலிவுட் முன்னணி ஹீரோ சல்மான்கான் கட்டுப்பாட்டில் இருப்பதாக அசின் பற்றி தகவல். ஆனால், வெளிநாட்டிலுள்ள ஒரு தொழிலதிபருடன் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
28) ராணி முகர்ஜியும், பாலிவுட் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் காதலிக்கின்றனர். விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர்.
29) 'விருந்தாளி' படத்தில் நடித்தபோது காதல் வலையில் சிக்கிய தியானா, காதலனை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
30) 'குத்து' ரம்யா வெளிநாட்டு காதலன் ரபேலை மணப்பதாக அறிவித்தாரே தவிர, எம்.பி ஆன பிறகு அந்தப் பேச்சையே மறந்து விட்டார்.
31) நீதுசந்திரா தன் காதலனுக்கு 'குட் பை' சொல்லிவிட்டாராம்.
32) ஸ்ரேயாவுக்கு தாய்லாந்தில் பாய் பிரெண்ட் இருக்கிறாராம்.
33) நிலாவுக்கு டெல்லியில் பாய் பிரெண்ட் இருக்கிறார்.
34) இளம் இசையமைப்பாளரைக் காதலித்த பத்மப்பிரியா, அவருக்கு 'டாட்டா' காட்டி விட்டாராம்.
35) இசையமைப்பாளர் அனிரூத், ஆண்ட்ரியாவின் காதல் விவகாரம், இணையம் மூலம் பிரபலமானது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர்கள் பிரிந்து விட்டனர்.
36) ஆண்ட்ரியாவை காதலிப்பதாகச் சொன்ன மலையாள ஹீரோ பஹத் பாசில், பிறகு ஆண்ட்ரியா தன்னை வெறுத்து ஒதுக்கியதால், இப்போது நஸ்ரியாவைக் காதலித்து, நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளார். ஆகஸ்டு 21ம் தேதி அவர்கள் திருமணம் நடக்கிறது.
37) 'சூரிய நகரம்' பட இயக்குனர் செல்லமுத்து, தன் படத்தில் நடித்த மலையாள நடிகை மீரா நந்தனை காதலிப்பதாக அறிவித்தார். ஆனால், அவர் காதலை மீரா தூக்கி எறிந்து விட்டார்.
38) பார்த்திபனை காதலித்து மணந்து, பிறகு விவாக ரத்து செய்த சீதா, டி.வி நடிகர் சதீஷை காதலித்து மணந்தார். இப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
39) வெளிநாட்டுக் கணவரை விவாகரத்து செய்த அம்பிகா, நடிகர் ரவிகாந்துடன் வாழ்க்கை நடத்தினார். இப்போது அவர்கள் பிரிந்து விட்டதாகத் தெரிகிறது.
40) டி.வி நடிகர் ஆகாஷை காதலித்து மணந்த வனிதா விஜயகுமார், பிறகு அவரை விவாகரத்து செய்தார். உடனே ஆனந்தராஜன் என்பவரைக் காதலித்து, 2வது திருமணம் செய்தார். பிறகு மீண்டும் ஆகாஷுடன் வாழ்ந்தார். கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்த வனிதா, கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் தம்பி டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை காதலிக்கிறார். ஆனால், திருமணம் செய்து கொள்ளவில்லை என்று இருவரும் மறுக்கிறார்கள்.
41) பெங்களூர் இளைஞன் ஒருவரை காதலிக்கிறார், 'கதை' பட ஹீரோயின் நிவேதிதா. விரைவில் அவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
42) எமி ஜாக்சன், வெளிநாட்டு பாய் பிரெண்டுடன் சுற்றுகிறார்.
43) 'மறந்தேன் மன்னித்தேன்' படத்தில் நடித்தபோது ஆதி, டாப்சி காதல் விவகாரம் வெளியானது. அவர்கள் மறுத்தனர். 'ஆடு புலி' படத்தில் நடித்தபோது ஆதி, பூர்ணா காதலிப்பதாகக் கூறப்பட்டது. பிறகு இருவரும் அதை மறுத்தனர்.
44) கண்ணதாசனின் பேத்தி தயாரிப்பாளர் டாக்டர் சத்யலட்சுமியை, ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட் காதலித்தார். பிறகு அவர்களுக்கான திருமணத் தேதி குறிக்கப்பட்டது.
45) 'காதலில் விழுந்தேன்' படத்தில் ஜோடி சேர்ந்த நகுலன், சுனேனா காதலிப்பதாகக் கூறப்பட்டது. பிறகு 'கந்தக்கோட்டை' படத்தில் ஜோடி சேர்ந்த நகுலன், பூர்ணா காதல் வலையில் சிக்கியதாகத் தகவல் பரவியது. பிறகு 'அமளி துமளி' படத்தில் நடித்தபோது நகுலனும், 'சுப்ரமணியபுரம்' சுவாதியும் காதலிப்பதாக செய்தி வெளியானது.
46) அகத்தியன் மகள் விஜயலட்சுமிக்கு சினிமாத் துறைக்கு சம்பந்தம் இல்லாத பாய் பிரெண்ட் இருக்கிறார். அவர் பெரிய பணக்காரர்.
47) 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்தபோது ஜெய், அஞ்சலி காதல் விவகாரம் வெளியாகி பிசுபிசுத்தது. 'திருமணம் எனும் நிக்காஹ்', 'ராஜா ராணி' படங்களில் நடித்தபோது ஜெய், நஸ்ரியா நாசிம் காதலிப்பதாக வதந்தி வெளியானது.'சுப்ரமணிய புரம்' படத்தில் நடித்தபோது ஜெய், சுவாதி காதலிப்பதாக சொல்லப்பட்டது. இப்போது 'வடகறி' படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளனர் என்றாலும், காதல் விவகாரம் கானல் நீராகவே இருக்கிறது.
48) 'ஐந்து ஐந்து ஐந்து' படத்தில் அறிமுகமான மிர்த்திகா, பாய் பிரெண்டை காதலித்து, அவரையே திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது.
49) காதலித்து மணந்த கணவரை விவாகரத்து செய்துள்ள ஜோதிர்மயி, 2வது திருமணம் செய்து கொண்டதாகவும், அதை மீடியாவுக்கு சொல்லாமல் ரகசியம் காப்பதாகவும் கேரளாவில் கிசுகிசுக்கிறார்கள்.
50) டி.வி நிகழ்ச்சித் தொகுப் பாளர் ஒருவரை காதலிக்கும் சாந்தனு, இதற்கு முன் சந்தியாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.
 அடுத்த வாரமும் காதல் தொடரும்