குறையாத உடல் வருத்தத்தில் வித்யா



குயின் பட வெற்றி காரணமாக கங்கணா ரனாவத் நடித்துள்ள ரிவால்வர் ராணிக்கு வினியோகஸ்தர்கள் மத்தியில் மவுசு ஏற்பட்டுள்ளது. 4 கோடி ரூபாயில் உருவான இந்த படம் 18 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. பிரபுதேவாவின் ஆக்ஷன் ஜாக்சனில் பிசியாக இருக்கிறார் அஜய் தேவ்கன். சிங்கம் 2 ஷூட்டிங்கிற்கு இடைவெளி விட்டிருக்கிறார். இந்த ஓய்வில் டிவி ஷோவை தொகுத்து வழங்க, சிங்கம் 2 டைரக்டர் ரோஹித் ஷெட்டி சென்றுவிட்டார்.

ஷவ்கீன் படத்தில் நடிக்க நர்கீஸ் ஃபக்ரி ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட, ஹீரோ அக்ஷய்குமார் அவரை ந¦க்கிவிட்டு அசினை புக் செய்யுமாறு சொல்லிவிட்டார். மகிழ்ச்சியில் பறந்துகொண்டிருக்கிறார் அசின். முதல் தயாரிப்பே ஷில்பா ஷெட்டியின் கையை கடித்துள்ளது. டிஷ்கியாவ் படம் ஓபனிங் பெறவில்லை. இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார் ஷில்பா. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, கரண் ஜோஹர் தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். அதற்கு முன் நடிப்பு கிளாசுக்கு செல்லுமாறு ஜான்விக்கு உத்தரவு போட்டுள¢ளார் கரண் ஜோஹர்.

எவ்வளவோ முயன்றும் உடல் எடையை குறைக்க முடியாததால் வருத்தத்தில் இருக்கிறார் வித்யா பாலன். இதனால் 2 பட வாய்ப்புகளை இழந்துள்ளார். ஆமிர்கானை பலமுறை பலர் அழைத்தும் அரசியலுக்கு வர மறுத்தார். இம்முறை அவரை சிலர் கட்டாயப்படுத்தினார்களாம். முடியவே முடியாது என மும்பையை விட்டே சில நாட்களுக்கு வெளியேறிவிட்டார் ஆமிர்.

ஜியா