சாப்ளின் குழந்தையின் சைக்கிள் ஆசை!



கிராமத்துக் குழந்தைக்கும் சார்லி சாப்ளினுக்குமான நட்பை கருவாகக்கொண்டு உருவாகியுள்ள  படம் ‘சாப்ளின் சாமந்தி’. சைக்கிள் வாங்க ஆசைப்படும் குழந்தை சாமந்திக்கு, பள்ளிக்கூட மாறுவேடப் போட்டியில் ஜெயித்தால் பரிசாக சைக்கிள் கிடைக்கும் எனத் தெரியவருகிறது. சார்லி சாப்ளின் வேடம் போட முடிவுசெய்த குழந்தை, அவர் அணிந்ததைப்போல் தொப்பி, ஷூ மற்றும் உடையை சேகரிக்க முயற்சி செய்கிறாள். அந்த முயற்சி வென்றதா? போட்டியில் ஜெயித்தாளா? சைக்கிள் கிடைத்ததா? என்பதை திரைக்கதை விளக்குகிறது.

சாமந்தியாக குழந்தை நட்சத்திரம் ஹிருத்திகா நடித்துள்ளார். இந்தக்கதையில் காதல் மற்றும் நகைச்சுவைக்கும் இடம் உண்டு. காதல் காட்சிகளில் கிரிஷ் - தியானா நடித்துள்ளனர்.
“குழந்தைகளை மட்டுமல்ல, அனைத்துத் தரப்பையும் கவரும் படமாக இருக்கும்’’ என்கிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருக்கும் ஆர்.பிரகாஷ்.