கதை கேட்கிறார் கார்த்திகா!



‘கோ’ ஹிட். ‘அன்னக்கொடி’ ஊற்றிக்கொண்டது. இனி என்ன செய்வதென்று புரியாமல் மலையாளத்திலும், தெலுங்கிலும் திறமை காட்டச் சென்ற கார்த்திகாவுக்கு அருண் விஜய் கொடுத்த அற்புதமான வாய்ப்பு, ‘வா டீல்’. இதில் நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருக்கும் கார்த்திகா, எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு’ படத்தில், ஆண்களுக்கு நிகரான வேடத்தில் நடித்து வருகிறார்.

இவ்விரு படங்களும் ரிலீசான பிறகு தமிழில் தனக்கு மார்க்கெட் அந்தஸ்து கிடைக்கும் என்று நம்பும் அவர், இப்போது  அம்மா ராதாவிடம் கதை கேட்கும் விஷயத்தை விடுவதில்லையாம். அவரே கேட்கிறாராம். மாற்றங்கள் வேண்டும் என்றாலும், அவரே கருத்து சொல்கிறாராம். மகளின் திடீர் மெச்சூரிட்டியைப் பார்த்து அகம் மகிழ்ந்துள்ளாராம் ராதா.