வாய்ப்பை பறிக்கும் தீபிகா?



டைரக்டர்ஸ் ஹீரோ என கேள்விப்பட்டிருப்போம். தீபிகா படுகோன், டைரக்டர்ஸ் ஹீரோயின். டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டு டைரக்டர் நினைத்ததை திரையில் கொண்டு வந்து காட்டுபவர்தான் டைரக்டர்ஸ் ஹீரோ. அந்த விதத்தில் தீபிகா டைரக்டர்ஸ் ஹீரோயின். வெறும் அந்த விதத்தில் மட்டுமல்ல, எந்த டைரக்டரின் படத்தில் நடிக்கிறாரோ அவரது செல்லப் பிள்ளையாக, அவரது நெருங்கிய தோழியாக இவர் மாறிவிடுவதும் டைரக்டர்ஸ் ஹீரோயின் என பாலிவுட்டில் இவருக்கு பெயர் கிடைக்க காரணம்.

தீபிகா படுகோன், பேரழகி... கடின உழைப்பாளி... ரசிகர்களை அதிகம் ஈர்க்கிறார்... இந்தக் காரணங்களுக்காகவே அவருக்கு பெரிய படங்கள் கிடைத்து வருகிறது. பிசியாக இருக்கிறார் என பலர் சொல்ல லாம். ஆனால் அவரைவிட நடிப்பிலும் அழகிலும் ரசிகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் ஹீரோயின்கள் பலர் உண்டு. சொல்லப்போனால், ஒல்லிப்பிச்சான¢ நடிகையாகத்தான் தீபிகாவை ரசிகர்கள் பார்க்கிறார்கள். அவர் கவர்ச்சி உடைகள் அணிந்தாலும் கவர்ச்சியான நடிகை என சொல்ல முடியாத அளவில்தான் இருக்கிறார். அப்படி இருந்தும் டாப் கியரில் முன்னணி ஹீரோயின்களுக்கெல்லாம் அவர் தண்ணி காட்டிக்கொண்டிருப்பதற்கு முக்க¤ய காரணம், டைரக்டர்ஸ் ஹீரோயினாக இருப்பதுதான்.

சஞ்சய் லீலா பன்சாலி, பாலிவுட்டின் டாப் இயக்குனர். அவரது டைரக்ஷனில் 'ராம் லீலா' படத்தில் நடித்தார். இப்போது மீண்டும் அவரது டைரக்ஷனில் 'பஜிராவோ மஸ்தானி' படத்தில் அவர் நடிக்கிறார். 'காக்டெயில்' படத்தில் சைப்அலிகானுடன் தீபிகா நடித்தார்.

ஹோமி அதஜானியா இயக்கினார். ஹோமியின் அடுத்த படம், 'ஃபைண்டிங் ஃபன்னி'. இதில் சைப்அலிகானை கழற்றிவிட்ட ஹோமி, தீபிகாவை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். 'லவ் ஆஜ் கல்' படத்தில் தீபிகாவை செலக்ட் செய்த இம்தியாஸ் அலி, தனது அடுத்த படத்திலும் அவரையே நடிக்க வைத்திருக்கிறார். இதில் ரன்பீர் கபூர் ஹீரோ. 'ஓம் ஷாந்தி ஓம்' படத்துக்குப் பிறகு மீண்டும் பெண் டைரக்டர் பர்ஹா கானுடன் 'ஹேப¢பி நியூ இயர்' படத்திலும் இணைந்துள்ளார் தீபிகா.

இவை எல்லாமே தீபிகா டைரக்டரின் ஹீரோயின் என்பதற்கு சாட்சிகள். ஒரு பெரிய டைரக்டரின் படத்தில் நடிக்கும்போதே அந்த டைரக்டரின் ஃபேமிலி ஃப்ரெண்டாக மாறிவிடுகிறாராம் தீபிகா. ஷூட்டிங் இடைவெளியில் டைரக்டரின் வீட்டி லிருந்து வரும் உணவை ருசி பார்ப்பது, அடுத்த நாள் தனது வீட்டு சாப்பாட்டை டைரக்டருக்கு அளிப்பது, ஷூட்டிங்கிற்கு வரும் டைரக்டரின் குடும்பத்தாருடன் ஒன்றிப்போவது, விடுமுறை நாளில் அவர்கள் வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் தருவது, தனது வீட்டுக்கு அவர்களை அழைத்து விருந்து தருவது என இப்படி பிழைக்கத் தெரிந்த நடிகையாக இருக்கிறார் தீப¤கா.

சமீபத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டே அதே டைரக்டரின் அடுத்த படத்துக்கும் தீபிகா புக் ஆனபோதுதான் அந்த பிரச்னை வெடித்தது. அந்த டைரக்டரின் அடுத்த படத்தில் நடிக்க நர்கீஸ் ஃபக்ரி தேர்வாகி இருந்தாராம். கடைசி நேரத்தில் டைரக்டரின் மனைவி போட்ட உத்தரவால் அந்த வாய்ப்பு தீபிகாவுக்கு போய்விட்டதாம். கடும் கோபம் அடைந்தார் நர்கீஸ் ஃபக்ரி. ''சினிமா வாய்ப்புக்காக இப்படியெல்லாம் தீபிகா நடந்துக்குவார் என நான் நினைக்கவே இல்லை.

என்னிடம் வந்து இந்தப் படத்தை எனக்கு விட்டுக்கொடு என கேட்டிருந்தால், போனால் போகட்டும்னு விட்டுக்கொடுத்திருப்பேன்'' என திம¤ர் கலந்த தொனியில் சொல்லிவிட்டார் நர்கீஸ். தீபிகா ஷாக் ஆனதுடன் முகம் சிவந்தார். ''சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த டாப் நடிகை நான். எனக்கு யாருடைய வாய்ப்பையும் பறிக்க வேண்டிய அவச¤யமில்லை. நர்கீஸ் புதுமுக பொண்ணு. அவள் சீனியர் நடிகையைப் பற்றி இப்படியெல்லாம் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என தடாலடியாகச் சொல்லியிருக்கிறார் தீபிகா.

''இதுபோன்ற பல பனிப்போர்களை தீபிகா பார்த¢துவிட்டார். அதனால் இதில் எல்லாம் நீந்திக் கரையேறுவது அவருக்கு பெரிய விஷயமே கிடையாது. 2016 வரை அவர்தான் பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட நடிகை'' என்கிறார்கள் பாலிவுட் விமர்சகர்கள்.

- ஜியா