ஈடுகொடுக்க மல்லிகா ரெடி!சோனாக்க்ஷி சின்ஹாவின் ஆபாசப் படங்கள் நெட்டில் பரவி வருகின்றன. அதில் இருப்பது நானல்ல என கூலாக அவர் சொல்கிறார்.‘கிக் 2’ மூலம் பாலிவுட்டுக்குச் செல்கிறார் இசையமைப்பாளர் தமன். இதில் சல்மான் கான் ஹீரோ.காதலன் ரன்வீர் சிங்குடன் திடீரென சண்டை போட்டுள்ளார் தீபிகா படுகோன். 2 வாரமாக இருவரும் பேசவில்லை.

தொடர்ந்து தனது நடிப்பை விமர்சிப்பவர்கள், மற்ற ஹீரோயின்களுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்கிறார் சன்னி லியோன்.2 வயது மகன் ஆப்ராமுடன் கோவா சென்று விடுமுறையைக் கழித்துள்ளார் ஷாருக்கான். மனைவி கவுரியை அழைத்துச் செல்லவில்லையாம்.ராஜமவுலியின் படத்தில் நடிப்பதுதான் தனது ஆசை என்கிறார் விவேக்   ஓபராய்.

‘இளம் கவர்ச்சி நடிகைகளுக்கு என்னால் ஈடு கொடுத்து நடிக்க முடியும். இப்போதும் நான் கிளாமர் குயின்தான்’ என ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் மல்லிகா ஷெராவத்.மலையாள ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படம் முடிந்ததும் தனக்குத் திரையிட்டுக் காட்டுமாறு டைரக்டர் சித்திக்கிடம் கூறியுள்ளார் சல்மான் கான்.‘தில்வாலே’ படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகும் கஜோல், அந்தப் படத்துக்காக ரூ.5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.

-ஜியா