குத்துப்பாட்டே துணை!‘சத்ரபதி’, ‘வெற்றிவேல் சக்திவேல்’ படங்களில் நாயகியாக நடித்தாலும், குத்துப்பாடல்தான் நிகிதாவை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. ‘சரோஜா’ படத்தில் இவர் ஆடிய ‘கோடானு கோடி...’ நல்ல வரவேற்பைப் பெற்றது. கன்னடம் மற்றும் தெலுங்குப்படங்களில் நடிக்கப்போயிருந்தவரை, விஷால் நடிக்கும் ‘பாயும் புலி’ படத்துக்காக அழைத்து வந்திருக்கிறார்கள். அம்மணி போட்டிருக்கும் ஆட்டம் யூத்துகளைக் கிறங்க வைக்குமாம்.