முத்தத்தின் விலை!‘குள்ளநரிக்கூட்டம்’ வெற்றிப் படத்தை இயக்கிய பாலாஜியின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் படம் ‘எங்க காட்டுல மழை’. பரபரப்பாக பேசப்பட்ட ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தின் மிதுன் மகேஸ்வரன் இந்தப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.

 நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்துள்ளார். அருள்தாஸ் மற்றும் அப்புக்குட்டி முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.


சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தின் சூர்யா ஏ.ஆர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற, அதே படத்தின் கிளைட்டன் சின்னப்பா வசனம் எழுதியிருக்கிறார். கார்த்திக், ஹரிஹரன், ரஞ்சித் ஆகியோருடன் கானா பாலாவும் பாடியிருக்கிறார்.

நா.முத்துக்குமார் எழுதியுள்ள ‘அடடா காதல் வந்ததே...’, சினேகன் எழுதியுள்ள ‘ஓர் முத்தம் என்ன விலை...?’ ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகும் என்கிறார் இயக்குனர் பாலாஜி.