சினிமாக்காரரை வெறுக்கும் சமந்தா!தொழிலதிபருடன் காதல், தொழிலதிபரை மணக்கப்போகிறார் என்றெல்லாம் வரும் செய்திகளைக் கண்டு சிரிக்கிறாராம் சமந்தா. ‘நல்லவேளை, தொழிலதிபருடன் காதல் என்கிறார்கள். நடிகருடன் என்று சொல்லவில்லை. நான் ஒருபோதும் சினிமாக்காரரை மணந்துகொள்ளமாட்டேன்’ என்கிறார்.

சமீபகாலமாக கவிதை எழுத ஆரம்பித்திருக்கும் ஸ்ருதிஹாசன், அவ்வப்போது தத்துவங்களையும் உதிர்த்துவரு கிறார். ‘கடமையை திருப்தியாகச் செய்யுங்கள். உங்களுக்கான பலன் உறுதியாகக் கிடைக்கும். அரைகுறையாகச் செய்யும் செயல்களுக்கெல்லாம் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது சரியல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக சக மனிதர்களை நேசிக்கப் பழகுங்கள். உங்கள் வாழ்க்கை உன்னதமாகும்’ என்பது அம்மணியின் சமீபத்திய தத்துவம்.