பார்வதியின் மனப்பாட சக்தி!



‘உத்தம வில்லன்’ ரிலீசுக்கு காத்திருக்கும் பார்வதி நாயர், அதில் கமல்ஹாசனின் மருமகளாக நடித்துள்ளார். இதையடுத்து கன்னடத்தில் கிஷோர் ஜோடியாக நடித்துள்ள ‘வாஸ்கோடகாமா’ படம், தனக்கு நல்ல பெயர் வாங்கித்தரும் என்று நம்புகிறார். இவரிடம் ஒரு தனி குணம் இருக்கிறது.

அதாவது, மொழி தெரியாத படங்களில் நடிக்கும்போது, வசனங்களை மனப்பாடம் செய்வதில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே உள்வாங்கி, பிறகு கேமரா முன் நின்று, உணர்ச்சி பாவங்களுடன் பேசி நடித்து பாராட்டு வாங்கி விடுவாராம்.

‘இன்னொருத்தர் டயலாக்கை சொல்ல, அதைக் கேட்டு மீனிங் புரிஞ்சுகிட்டு, அதுக்குப் பிறகு நான் உதட்டை அசைச்சுப் பேசி நடிக்கிறதுல ஜீவன் இருக்காது. அது எவ்வளவு பெரிய வசனமா இருந்தாலும் சரி, ஒருமுறை கேட்டு மனசுல பதிய வெச்சுக்குவேன். அர்த்தம் மாறாம பேசி நடிச்சு சபாஷ் வாங்கிடுவேன்’ என்கிறார் பார்வதி நாயர்.

- தேவா