தமன்னாவின் புதிய தொழில்!ஒப்பனை இல்லாமலே வைரமாக ஜொலிக்கும் தமன்னா, இப்போது நகை வடிவமைப்பில் இறங்கி அசத்துகிறார். அப்பா சந்தோஷ் பாட்டியா, நகை வியாபாரத்தில் இருப்பதால், புதிய டிசைன்களை உருவாக்குவதில் நல்ல பயிற்சி பெற்ற தமன்னா, அனைத்துவகைப் பெண்களையும் கவரும் வகையில் நவீன மாடல்களில் நகை வடிவமைப்பு செய்திருக்கிறார்.

அவற்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்காக www.white&gold.com என்ற இணைய தளத்தை துவக்கி யுள்ளார். ‘நியாயமான லாபத்தில், அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’ என்கிறார் தமன்னா.