மூளையைக் கழற்றும் தமன்னா!



தமன்னா அழகி என்பது தெரியும். ஆனால், எப்படி அந்த அழகை மெயின்டெயின் செய்கிறார் என்று  ஒரு இளம் ஹீரோ கேட்டார். அதற்கு பதிலளித்த தமன்னா, ‘தினமும் ஆறு மணி நேரமாவது மூளையைக் கழற்றி வைத்துவிட்டு, நிம்மதியாகத் தூங்க வேண்டும்.

பகல் நேரங்களில் பாட்டில், பாட்டிலாக தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி ரொம்ப அவசியம். நிறைய தண்ணீர் குடிக்கிறேன். யோகா செய்கிறேன். தியானத்தைக் கடைப்பிடிக்கிறேன். என்னை எல்லா நேரத்திலும் சந்தோஷமாக வைத்திருக்கிறேன். இதுதான் என் அழகின் ரகசியம்’ என்று, கலகலவென்று சிரித்தார்.

-தேவா