நஸ்ரியா கணவரை விரும்பும் ஆண்ட்ரியா!



‘ராஜாராணி’ பட நாயகி நஸ்ரியா, மலையாள ஹீரோ பஹத் பாசிலை திருமணம் செய்த பிறகு நடிக்கவில்லை. ஆனால் பஹத் நடித்து வருகிறார். அவரும் ஆண்ட்ரியாவும் இணைந்து நடித்த ‘அன்னயும் ரசூலும்’ படம் வெற்றி கரமாக ஓடியது.

அந்தப்படத்தில் பஹத்தை உருகி உருகிக் காதலிக்கும் நாயகியாக ஆண்ட்ரியா நடித்திருந்தார். ‘உங்களுக்கு எப்படிப்பட்ட கணவர் வேண்டும்?’ என்று மலையாள மீடியா கேட்டபோது. ‘பஹத் போல’ என்று பதில் சொன்னதில் இணைய தளங்களில் கிசுகிசு இடம்பிடித்துள்ளது.

பிரசன்னா புரொடக்சன் சார்பில் சுமதி சந்திரசேகர் தயாரிக்கும் படம் ‘ஆயிரம் தலக்கட்டு’. கிராமியப் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மோதல்களைக் கருவாகக் கொண்ட கதை. திருவிழாக் கொண்டாட்டங்கள் நிறைந்த இந்தப்படத்தை ‘அரவிந்தன்’ நாகராஜிடம் உதவியாளராக இருந்த குரு சங்கிலி இயக்குகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரஜின்- மிருத்திகா நடிக்கிறார்கள்.