கமகமக்கும் உணவு தர கஞ்சா கருப்பு வர்றாரு!



சென்னை கே.கே.நகர் காமராஜர் சாலையில் இருக்கும் ‘கவிஞர் கிச்சன்’ கஞ்சா கருப்புக்குப் பிடித்த உணவகம். சென்னையில் இருக்கும் நாட்களில் அந்த உணவகத்திலிருந்து பார்சல் வரவழைத்து விரும்பிச் சாப்பிடுவார். மாதத்துக்கு ஒருமுறை நேரடியாக விசிட் செய்து, உணவகத்திலேயே அமர்ந்து சாப்பிடுவார். சொந்தப்படம் தயாரித்து நொடிந்துபோனதும், பாதுகாப்புக்கு ஏதாவது தொழில் தொடங்கவேண்டும் என்று முடிவு செய்தார்.

‘கவிஞர் கிச்சன்’ நடத்தும் ஜெயம்கொண்டான் பாடலாசிரியராகவும் இருப்பதால், அவருடன் கஞ்சா கருப்புக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அதனடிப்படையில் ‘நான் ஒரு ஓட்டல் நடத்தப்போறேன்.அதற்கு நீங்க பொறுப்பா இருந்து பாத்துக் கொடுக்க முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார். ஜெயம்கொண்டான் ஓகே என்றதும், வளசரவாக்கம் பகுதியில் இடம் பார்த்து வருகிறார் கருப்பு. மதுரை ஸ்டைலில் கமகமவென உணவு வகைகள் இருக்குமாம்.