சறுக்கு மர மனம்!



மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ‘பர்சனல் பக்கங்க’ளில்  ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் பேசிய பேச்சுக்கள், அவரது உணர்வுகள் நெஞ்சை உருக வைத்தன. குறிப்பாக ‘என் வாழ்க்கையில் நிபந்தனையற்ற அன்பைக் கண்டதில்லை’ என்ற அவரின் வாக்குமூலம், ஒரு தனிமனுஷியாக அவர் எப்படி வாழ்ந்திருப்பார் என்பதை உணர்த்துகிறது.   
- பி.சண்முகம், ஈரோடு.

பாலிமர் கரன்சி, கிழியும் நோட்டின் சிக்கல் தீர்க்கும் அமேஸிங் ஐடியா. இன்டர்நெட் பேங்கிங்கின் விபரீத விளைவுகளை பக்குவமாக அலசிய ‘பணமற்ற பரிவர்த்தனை’ அருமை. இரு கட்டுரைகளும் காம்போ டைமிங் ஹிட்.
- ஆர்.விஜய் ஜனார்த்தனன், திண்டுக்கல்.

‘மாவீரன் கிட்டு’, ’சைத்தான்’ என இரு படங்களையும் ஹானஸ்டாக அலசிய ரிவ்யூவிற்கு ரிபீட் கிளாப்ஸ்.
- எம்.ஜி.சதீஷ் மித்ரா, சென்னை-78.

‘ஊஞ்சல் தேநீரி’ல் யுகபாரதி கூறிய சுவரொட்டி சுப்பையா போன்ற ஆன்மாக்களை திரியாக்கி எரித்த மனிதர்கள்தான், இன்று சமூகத்தின் மிஞ்சியுள்ள அறத்திற்கு ஒரே காரணம்.
- எம்.சக்திமுருகன், தர்மபுரி.

பார்வதி நாயரிடம் நோ பேச்சு! பப்பாளி அழகியின் சென்டர் ஆஃப் கிராவிட்டியில் சறுக்கு மரமானது மனம்.
- சி.ஆனந்தன், திருச்செந்தூர்.  

ரிக்‌ஷா தம்பதி ‘ஏழுமலை- தேவி’யின் பருவங்கள் கடந்த காதல் கதை மாநகர் வெயிலிலும் இளம் பூந்தூறல் மகிழ்ச்சி.
- து.ரவிக்குமார், பெங்களூரு.

‘Download’ மனசு பகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசனின் பளீர் சிம்பிள் பேச்சு அருமை.
- பி.எல்.மஞ்சுளா, விழுப்புரம்.

‘காதலுக்கும் ட்யூஷனா?’ டிப்ஸ் ஓகே. ஆனால் என்ட்ரி ஃபீஸ் கண்ணைக் கட்டுதே பாஸ்!
- ஜி.சுவாமிநாதன், சென்னை-4.

‘நெக்ஸ்ட் இயர் ப்யூட்டீஸி’ன் ஷைனிங்  இன்ட்ரோ சூப்பர். மில்கி ப்யூட்டிகளை வரவேற்க ஆரத்தியோடு நாங்க ரெடி!
- கா.ரேஹான் சுப்பு, மதுரை.

வாழ்வு தரும் நிதர்சன தோல்விகளையும், சினிமாவின் ஜொலிக்கும் போலி ஆறுதலையும் மிரர் இமேஜாகக் காட்டியது ‘முகங்களின் தேசம்’.
- கே.சிவநாதன், கோவை.

லிவிங் ஸ்மைல் வித்யாவின் சரிதம் அவார்ட் வாங்கினாலும் அதிகரிக்கும் நிஜ வாழ்வு துயரத்தை ஸ்மைலோடு கடக்கும் நிலை நெஞ்சில் ரணம்.
- பொ.ஜார்ஜ் கருப்பன், திருநெல்வேலி.

நட்பின் வானம் திறக்கும் அறிவுமதியின் ‘நட்புமொழி’, நட்பிற்கு புதிய ஆத்திச்சூடி.
- மா.வளர்மதி சிவா, நாகர்கோவில்.

‘தமிழ்நாட்டு நீதிமான்கள்’ தொடரில் தனது வழக்குரைஞர் தொழில் கடந்து சமூகத்தை நெஞ்சில் நிறுத்தி செயல்பட்ட சுப்பிரமணிய ஐயர் மேல் அன்லிமிடெட் மரியாதை பிறந்தது.
- எஸ்.கார்த்திகா, திருவண்ணாமலை.