குங்குமம் டாக்கீஸ்



* இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் நடித்த படங்கள் படு ஃபிளாப் ஆன பிறகும், இணைய உலகில் சன்னி லியோனுக்கு மவுசு குறையவில்லை. ‘இந்தியாவில் ஆன்லைனில் இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்’ பட்டியலில் பிரதமர் மோடி, சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஆகியோரைத் தாண்டி முதலிடம் பிடித்திருக்கிறார் சன்னி.

* இனி ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்க முடிவு செய்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். இதற்கான கதைகளை மட்டுமே அவர் கேட்கிறாராம். அதற்காக ஜிம்மிற்கு போய் உடம்பைத் தேற்ற ஆரம்பித்திருக்கிறார். வெஜிடேரியனுக்கும் மாறிவிட்டார்.

* ‘சதுரங்க வேட்டை’ வினோத்,  கார்த்தியை வைத்து இயக்கும் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. ஹீரோயினாக ரகுல் ப்ரீத்சிங்கை பேசி வருகிறார்கள்.

* ஒரு சமயம் ஒரு படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி நடிப்பார் உதயநிதி. இப்போது ஒரே நேரத்தில் எழில், தளபதி, கவுரவ் என மூன்று இயக்குநர்களின் படங்களில் நடிக்கிறார்.

* தெலுங்குப் படங்கள் குறைந்துவிட்டன. தமிழில் இன்னும் தீவிரமாக இறங்க தமன்னா சென்னையிலேயே குடியேறுகிறார். அதற்காக போட் கிளப், அடையாறு, ஈ.சி.ஆர். பகுதிகளில் வீடு தேடுகிறார்.

* பாலிவுட்டில் பார்வதி ஓமனக்குட்டன் (அதான்ப்பா... அஜித் ‘பில்லா 2’ பொண்ணு) செம ஹேப்பி மூடில் இருக்கிறார். அவர் நடித்த ‘டொபாரா’ நியூயார்க்கில் நடந்த தெற்கு ஆசிய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதுதான் அந்த மகிழ்ச்சியின் ரகசியம்.

* அசல் ஹீரோவாகவே மாறிவிட்டார் சந்தானம். பேச்சுவார்த்தை, தோரணை அப்படி ஆகிவிட்டது. சண்டைக் காட்சியில் ‘டூப்’ போடாமல் நடிக்கிறார். ‘‘இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் தனியான நகைச்சுவை வேடத்தில் நடிக்க மாட்டேன்’’ என்று சொல்லிவிட்டார்.

* ஆல்ரெடி தமிழில் கைவசம் 3 படங்கள் வைத்திருக்கும் பூர்ணா, இப்போது அரவிந்த்சாமியுடன் ‘சதுரங்க வேட்டை 2’வில் கமிட் ஆகியிருக்கிறார். இப்போது அதில் த்ரிஷாவின் போர்ஷன் படமாக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பூர்ணாவின் ஷூட் ஆரம்பமாகும்.

* முதல் தடவையாக ‘இமைக்காத நொடிகள்’ படத்தில் மேக்கப் போடாமல் நடிக்கிறார் நயன்தாரா. இதற்கு முன்னால் பாலுமகேந்திரா மட்டுமே ஒப்பனையை விரும்பாதவராக இருந்தார்.

* ‘ஹேப்பி பர்த் டே தலைவா’ என ரஜினியின் பிறந்த நாளுக்கு ட்விட்டரில் இப்படி வாழ்த்தியிருப்பது வேறு யாரும் அல்ல, நம்ம ஷாருக்கான் தான். அவரது அந்த வாழ்த்தை 7 ஆயிரம் பேர் ரீட்வீட்டி மகிழ்ந்துள்ளனர்.

* ‘‘இன்னும் எத்தனை காலம் சினிமாவில் இருப்பேன் எனத் தெரியவில்லை. நாளை என்ன நடக்கும் என்பது பற்றி நான் யோசிப்பதில்லை. எனவே எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லை’’ என ஃபீலாகியிருக்கிறார் காஜல் அகர்வால்.

* மறுபடியும் கல்லூரிக் களத்தில் காதல் படம் எடுக்கத் துணிந்துவிட்டார் டி.ஆர். அதற்கான ஸ்கிரிப்ட்டை உருவாக்கி முடித்துவிட்டார். பாடல்களை மட்டும் எழுதியிருக்கிறார் சிம்பு. படத்தில் ஒரு கேமியோ வேடத்தில் வருகிறார்.

* சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ ஷூட்டிங் ஜெட் வேகம் எடுத்திருக்கிறது. ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாகித் கபூர் நடித்து வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராயும் கமிட் ஆகியிருக்கிறார்.

* ராம் சரணின் ‘துருவா’ படத்தை ஐதராபாத்தில் பார்த்து ரசித்திருக்கிறார் சமந்தா. ‘‘அமேஸிங் பர்ஃபாமென்ஸ்’’ என டீமுக்கு பாராட்டுகளையும் அள்ளி வீசியிருக்கிறார்.

* தமிழ், தெலுங்கு கை கொடுக்காத நிலையில் மீண்டும் பாலிவுட் சென்ற சனா கான் முகத்தில் இப்போதுதான் உற்சாகம் துளிர்த்திருக்கிறது. அவர் படுகிளாமராக நடித்த ‘வஜா தும் ஹோ’ இந்த வாரம் ரிலீஸ் ஆவதுதான் எனர்ஜிக்கான காரணம்.

* ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் ஆதரவற்ற சிறுவர், சிறுமிகளின் காப்பகத்திற்கு எந்த நேரமும் உதவுகிறார் ரஜினி. இதற்காக எந்த நேரமும் தன்னை லாரன்ஸ் பார்க்க அனுமதி கொடுத்திருக்கிறார் ரஜினி.