ஆரோக்கிய வரைபடம்!
* பத்தொன்பது வயதுக்குட்பட்ட இளம் சிங்கங்கள் குறித்த கட்டுரை அபாரம். நாளைய இந்திய கிரிக்கெட் பிரகாசமாக இருக்கிறது! - சண்முகராஜ், சென்னை; நரசிம்மராஜ், மதுரை; மனோகர், கோவை; ஜெசி, சென்னை; ராஜ்குமார், குன்னூர்.
* லவ் அனுபவங்களை செலிபிரிட்டிகள் பகிர்ந்துகொண்டது செம கலகலப்பு. பரோட்டா சூரி எக்ஸ்பீரியன்ஸ் சூப்பரப்பு. - த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஜெசி, சென்னை.
* காஞ்சி கோயில் இட்லியை சைடிஷ் இல்லாமலே சாப்பிடலாம் என்று சொன்ன லன்ச் மேப், ஆரோக்கியத்தின் வரைபடம். - சித்ரா, திருவாரூர்; முருகேசன், கங்களாஞ்சேரி; ஜானகி ரங்கநாதன், சென்னை; மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி; நாகராஜன், திருச்சி; வளையாபதி, தோட்டக்குறிச்சி; கைவல்லியம், மானகிரி; லட்சுமி நாராயணன், வடலூர்; ராமகண்ணன், திருநெல்வேலி; ப்ரீத்தி, செங்கல்பட்டு; முத்துவேல், கருப்பூர்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.
* ‘லவ் கமாண்டோ’ ஐடியா அற்புதம். தமிழகத்தில் யாரேனும் ப்ரான்ச் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்! - மாணிக்கவாசகம், கும்பகோணம்; முத்துவேல், கருப்பூர்.

* ராஜா சந்திரசேகரின் ‘தெரியாமல் விழுந்த நிலவு’ கதையா கவிதையா என பிரமிக்க வைத்தது. - நாகராஜன், குண்டூர்; மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி; லட்சுமிநாராயணன், வடலூர்; தேவதாஸ், பண்ணவயல்.
* அரசியலுக்கு அப்பாற்பட்டு பலரும் விரும்பும் நல்லகண்ணுவைப் பற்றிய அறிமுகம் அருமையிலும் அருமை. - லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; காந்தி லெனின், திருச்சி.
* சினி உலகைப் பற்றிய எதார்த்த பிரதிபலிப்பாக அமைந்திருந்தது பூர்ணாவின் பேட்டி. - நரசிம்மராஜ், மதுரை; லக்ஷித், மடிப்பாக்கம்; சத்யா,கருப்பூர்.
* பாரிஸ் பஜார்கள் பற்றி லென்ஸ் வைத்து விஷயங்களைச் சொன்ன ‘அறிந்த இடம் அறியாத விஷயம்’ நவீன வரலாற்று அகராதி. - டி.எஸ்.தேவா, கதிர்வேடு; பாபுகிருஷ்ணராஜ், கோவை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; லக்ஷித், மடிப்பாக்கம்.
* அவமானம் சகித்து சமூகத்தின் துயர் களைந்த முருகானந்தத்தின் கதை திரைப்படமாவது தமிழர்களுக்கு பெருமை. - சைமன்தேவா, விநாயகபுரம்; சிதம்பரக்குமாரசாமி, அசோக்நகர்; மனோகர், கோவை; கோகுலகிருஷ்ணன், திருவாரூர்; மயிலை கோபி, அசோக்நகர்; த.சத்தியநாராயணன், அயன்புரம்;
* பழையபேப்பர் கடையில் எடைக்கு நூல்களை வீசிவிட்டுச் செல்லும் காலத்தில் 25 ஆண்டுகளாக புத்தகங்களைப் பாதுகாக்கும் ஹென்றி வின்சென்ட் அரிய பெரிய மனிதர்தான். - சண்முகராஜ், சென்னை; சைமன்தேவா, விநாயகபுரம்; வண்ணை கணேசன், சென்னை; மயிலை கோபி, அசோக்நகர்; மனோகர், கோவை; நம்ஷிகா, கருப்பூர்.
|