இரும்பு மனிதரின் சிலை ரெடி!
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேலின் சிலை குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சர்தார் சரோவர் அணையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இச்சிலை.பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான இச்சிலைக்கு 2013ம் ஆண்டு அக்.31 இல் வல்லபாயின் 138வது பிறந்தநாளன்று அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.மூவாயிரம் கோடி திட்டமான இதனை எல் அண்ட் டி நிறுவனம் ஏற்று செய்ய, சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிட். மேற்பார்வை செய்தது. சுதந்திர இந்தியாவில் 562 இந்திய சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இந்தியாவை படேல் உருவாக்கியதற்கான கவுரவம் இது.

- ரோனி
|