வர்ஜின் பூஜை!



தில்லியிலுள்ள இந்துக் கல்லூரி மாணவர்கள் வர்ஜின் மரத்துக்கு பூஜை செய்திருக்கிறார்கள். எதற்கு? காதல் கைகூடத்தான்! ஆண்டுதோறும் வர்ஜின் மரத்தடியில் இப்படி கன்னி பூஜை நடக்குமாம்! அப்போது அந்த ஆண்டின் சிறந்த இந்தி நடிகையை ‘தம்தமிமாய்’ என்ற பெயரில் தெய்வமாக பூஜித்து காதலி கிடைக்கவும் கன்னி கழியவும் ஏற்பாடு செய்யும்படி வேண்டிக் கொள்வார்களாம்! தொன்றுதொட்டு இந்த பிரார்த்தனை நடைபெறுவதுதான் ஹைலைட்! 

அந்த வகையில் இம்முறை நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் தெய்வமாகி இருக்கிறார்கள்! முன்னாள் மாணவரும் இயக்குநருமான நளின் ராஜன், இந்த வர்ஜின் விழாவுக்கு சீஃப் கெஸ்ட்!‘‘எங்கள் கேம்பஸிலேயே பெண்கள் ஹாஸ்டல் இருப்பதால் அவர்கள் எங்கள் கோரிக்கையை பரிசீலிக்கவும் இந்த விழா உதவும்!’’ என்கிறார் மாணவர் யூனியன் தலைவர் சஜீவ்!   

- ரோனி