நாச்சியார் அரசி செம ஹேப்பி
டபுள் லைக்குகளும், பூங்கொத்துகளுமாக வாழ்த்துகள் நிரம்பித் ததும்புகின்றன இவானாவின் வாட்ஸ் அப்பில்! பாலாவின் ‘நாச்சியாரி’ல் ஜோதிகாவின் கஸ்டடியில் இருந்த வெள்ளந்தி கர்ப்பிணிப் பெண் அரசியாக அப்ளாஸ் அள்ளிய அக்கட தேசத்துப் பொண்ணு. ‘‘ஸ்கூல் போயிட்டு இப்போத்தான் வந்தேன்ணா. என் ஃப்ரெண்ட்ஸ் யாரும் இன்னும் படம் பார்க்கல. ஆனா, ‘கங்கிராட்ஸ்...’னு டன் கணக்கில் பாராட்டினாங்க. அவங்க எல்லாரையும் நாளைக்கு தியேட்டருக்கு அழைச்சிட்டுப் போகப் போறேன்ணா..!’’ ஃப்ரெஷ் சிரிப்பில் பூரிக்கிறார் இவானா.‘‘இவானான்னா.. கடவுளின் பரிசுனு அர்த்தம். மலையாளத்துல குழந்தை நட்சத்திரமா ‘மாஸ்டர்ஸ்’, ‘ராணி பத்மினி’னு சில படங்கள்ல நடிச்சிருக்கேன்.
 ஆனா, எனக்கு ஹீரோயின் புரொமோஷன் கொடுத்தது ‘நாச்சியார்’தான். தமிழ்ல அறிமுகமாகிற படமே பாலா சார் படமா கிடைச்சது சந்தோஷமா இருக்கு. எங்க பூர்வீகம் கேரளா. கோட்டயம் பக்கம் சங்கனாஞ்சேரியில் வசிக்கறோம். இப்ப ப்ளஸ் டூ படிச்சிட்டிருக்கேன். அப்பா சாதிக், அம்மா டின்ஸி சாதிக் தவிர வீட்ல தங்கையும், ட்வின் பிரதர்ஸும் இருக்கோம். ட்வின்ஸும் மலையாளத்துல சைல்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ்தான். மலையாளத்துல நான் நடிச்ச படங்கள்ல ஏதாவது பாலா சார் பார்த்திருப்பார்னு நினைக்கறேன். ‘நாச்சியார்’ ஆடிஷனுக்கு கூப்பிட்டிருந்தாங்க. போயிருந்தேன்.
 செலக்ட் ஆனது நானே எதிர்பாராத ஆச்சரியம். அப்ப சிலர் ‘பாலா சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட். பயங்கரமா கோபப்படுவார்’னு சொல்லி பயமுறுத்தினாங்க. முதல் நாள் கொஞ்சம் உதறலலோடுதான் ஷூட்டிங் போனேன். ஆனா, அங்க போனதும் பயம் பறந்திடுச்சு. நல்ல ஃப்ரெண்ட் ஆகிட்டார். என் கேரக்டர் அரசினு சொல்லிட்டு, அவ எப்படி சிரிக்கணும்? எப்படி பார்க்கணும்? எப்படி பேசணும்னு ஒவ்வொரு ஸ்டெப்பையும் சொல்லிக் குடுத்தார். அதை அப்படியே கொண்டு வர ட்ரை பண்ணினேன் அதே மாதிரி முதல் நாள் ஸ்பாட்டுல ஜோதிகா மேமை சந்திச்சப்ப பிரமிப்பா இருந்தது.
 அவங்களே என்னை கூப்பிட்டு அன்பா பேசினது ஸ்வீட் மொமன்ட். ரொம்ப ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருந்தாங்க. என்கரேஜ் பண்ணினாங்க. ஸ்பாட்டுல ஜி.வி.பிரகாஷ் சாரோட அவ்வளவா பேசினதில்ல. அங்க அவர் ரொம்பவே சைலன்ட்டா இருப்பார். ‘ஜி.வி.பிரகாஷ் அவரோட படங்கள்ல எப்பவும் ஜாலியா கலாட்டாவா இருப்பார். பாலா சார் படம்னால கலாய்ப்பு, ஜாலி எல்லாம் கம்மி பண்ணியிருக்கார்’னு எங்க யூனிட்ல யாரோ சொன்னாங்க. நான் ஹீரோயினா அறிமுகமான படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. ஹேப்பியா இருக்கேன். எல்லாத்துக்கும் பாலா சார்தான் காரணம்...’’ வெள்ளந்தியாகச் சிரிக்கும் இவானா, தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.
- மை.பாரதிராஜா
|