டாப்ஸி!ரீடர்ஸ் வாய்ஸ்

‘‘சினிமா பின்புலம் இல்லாமல் நடிப்பில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு ரோல்மாடலாக இருப்பதுதான் என் லட்சியம்...’’ என்று கூறிய டாப்ஸியின் மனம் திறந்த பேட்டி ‘டாப்’பாக இருந்தது.
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; இலக்சித், மடிப்பாக்கம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; சரண் சுதாகர், வேளச்சேரி; ஆசை மணிமாறன், திருவண்ணாமலை; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; கருணாகரன், போரூர்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

சாதி, மதங்களைக் கடந்த சாதனை மனுஷி சிநேகாவுக்கு ஒரு ராயல் சல்யூட்!
- மகேஸ்வரி, பொள்ளாச்சி; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; கைவல்லியம், மானகிரி; ஆத்மநாதன், ஆற்காடு; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; ப.மூர்த்தி, பெங்களூரு; நரசிம்மராஜ், மதுரை; வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; சண்முகராஜ், திருவொற்றியூர்; ஆசிகா, வியாசர்பாடி; மாளவிகா ரமேஷ், சென்னை.

கட்டி முடிக்கப்படாத ஒரு வீட்டுக்குள் நடக்கிற கதையை வைத்து ‘கும்பளாங்கி நைட்ஸ்’ உருவாக்கப்பட்டிருந்தாலும், நன்கு கட்டி முடிக்கப்பட்ட புது வீட்டைப் போல கிரகப்பிரவேசம் கண்டுள்ளது அந்தக் கேரளப் படம்.
- ஜெர்லின், ஆலந்தூர்; சந்திரமதி, சென்னை; பிரேமா பாபு, சென்னை; அண்ணா அன்பழகன், சென்னை.

‘டுலெட்’ ரிலீஸான அன்றே விமர்சனத்தை எழுதி அசத்திவிட்டீர்கள்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; இலக்சித், மடிப்பாக்கம்; கவுரிநாத், பரங்கிமலை; தா.சைமன் தேவா, விநாயகபுரம்.

‘டிக்டாக்’ பற்றிய விழிப்புணர்வு கட்டுரை, சரியான நேரத்தில் அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி.
- நஞ்சையன், பொள்ளாச்சி; கைவல்லியம், மானகிரி; நரசிம்மராஜ், மதுரை; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஆர்.ஜெ.சி, சென்னை.

இனிமை நிறைந்த இசையைக் கொடுக்கும் டி.இமானின் ‘லைஃப் டிராவலு’ம் இதமான இனிமை.
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; இலக்சித், மடிப்பாக்கம்; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; அ.யாழினி பர்வதம், சென்னை.

சென்னையின் அடையாளமாய், புத்தகங்களின் ஆலயமாய் திகழும் ‘ஹிக்கின்பாதம்ஸ்’ கடையின் பெருமையை விவரித்த கட்டுரை ஒரு தகவல் களஞ்சியம்.
- த. சத்தியநாராயணன், அயன்புரம்; ஆத்மநாதன், ஆற்காடு; செல்வராஜ், விழுப்புரம்; மல்லிகா அன்பழகன், சென்னை; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; ப.மூர்த்தி, பெங்களூரு; கருணாகரன், போரூர்.