டூரிஸ்ட் கைட்!ஃப்ரெஷ் புன்னகை பொங்க எனர்ஜியில் அள்ளுகிறார் கேத்தரின் தெரசா. சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்று வந்ததுதான் காரணம்.‘‘மறக்க முடியாத ஹாலிடே ட்ரிப் அது. சவுத் ஆப்ரிக்கா இவ்ளோ அழகானு தெரியாமப் போச்சு.
நேஷனல் பார்க்குல இருக்கிற டேபிள் மலை போயிருந்தேன். அசரடிச்சிடுச்சு! அதன் உச்சிக்கு போனா... கடல் காத்து சிலுசிலுக்குது! பரந்து விரிந்த கடல் வரவேற்குது!கிட்டத்தட்ட ஸாங் ஷூட் விஷுவல். அதேபோல அங்க பெங்குயின் காலனி ஸ்பாட் போயிருந்தேன். அதுவும் ஹேப்பி மொமன்ட்..!’’ என டூரிஸ்ட் கைடு போல டீட்டெயில் கொடுக்கிறார் கேத்தரின்!   

மை.பா