அஞ்சு பன்ச்- விஜய் சேதுபதி*அசல் பெயர் விஜய குருநாத சேதுபதி. சினிமாவுக்கு விஜய் சேதுபதி. நெருங்கிய நண்பர்கள் விஜய், சேது என இரு விதமாய் அழைக்கிறார்கள்.  

*புத்தகங்கள் படிப்பதில்லை. மாறாக சமீபத்திய மலையாளப் படங்களைத் தவறாமல் பார்க்கிறார்.

*தனக்கு சக்சஸ் கொடுத்த இயக்குநர் களுக்கு மறக்காமல் மறு வாய்ப்பு வழங்குகிறார். ஹீரோவாக்கிய இயக்குநர் சீனு ராமசாமி மீது தனி மரியாதை உண்டு.

*காதல் திருமணம்தான். கொஞ்ச நேரம் கிடைத்தாலும் மகன், மகளுடன் கொஞ்சித் தீர்ப்பார். அதை சிறு வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போடுவார்.

*துணையாக அண்ணனும், தங்கையும் கணக்கு வழக்குகளை கவனிக்கிறார்கள். அலுவலகத்தில் பெரிய சைஸ் அப்பா படம் வைத்திருக்கிறார். வணங்கிவிட்டுத்தான் அன்றைய நாள் தொடங்குகிறது.