அறிமுகம் - சீன படத்தில் நடித்து தமிழுக்கு வந்திருக்கும் ஜார்கண்ட் பெண்!
உங்களைப் பற்றி..?
ஜார்கண்ட் பொண்ணு. தில்லி யுனிவர்சிட்டியில இங்லீஷ் லிட்ரேச்சர் படிப்பு. 2014ல மிஸ் டீன் இன்டர்நேஷனல் ரன்னர். 2018ல ஃபெமினா மிஸ் இந்தியா ஃபைனலிஸ்ட். அப்பா அமரேந்திர குமார், இன்ஜினியர். அம்மா மாதுரி படேல், பியூட்டீஷியன். சின்ன வயசில இருந்தே மாடலிங், நடிப்பு ஆர்வம் அதிகம். வீட்டிலேயும் செம சப்போர்ட்
 முதல் படம்..?
நிறைய விளம்பரங்கள், ஷார்ட் பிலிம்ஸ் கடந்து முதல் படம் நாக்பூரி மொழியிலே ‘மஹுவா’. அடுத்து தெலுங்கிலே ‘நின்னு தலச்சி’. அதைத் தொடர்ந்து ‘மேட்ச் ஆஃப் லைஃப்’, சீன மொழில ஒரு படம்.
தமிழ் என்ட்ரி..?
தெலுங்கு பட என்ட்ரிக்கு அப்பறம் சில படங்கள் வேற வேற மொழிகள்ல இருந்து கேட்டாங்க. அதிலே ‘பார்டர்’ படமும் ஒண்ணு. புரொடக்ஷன் டீம் ஆடிஷன் கூப்பிட்டாங்க. லுக் டெஸ்ட், தமிழ் வார்த்தைகள் டெஸ்ட் எல்லாம் நடந்துச்சு. அதாவது என்னதான் டப்பிங்னாலும் சரியா வாயசைக்கணும்ல. அந்த டெஸ்ட் எல்லாம் முடிஞ்சு செலக்ட் ஆனேன். படத்திலே அருண் விஜய் சார்க்கு நான் ஜோடி. அறிவழகன் சார் பொறுமையா சீன் சொல்லி என்கிட்ட பெஸ்ட் வாங்கியிருக்கார்.
 தமிழ் சினிமா அனுபவம்..?
எனக்கு வேற ஒரு மொழியிலே வேலை செய்த ஃபீலே இல்ல. சென்னை, தமிழ்நாடு, எல்லாமே புதுசு. ஆனாலும் அந்த ஃபீல் எங்கேயும் உண்டாகலை.
அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்..?
நான் நிறைய தமிழ் பாட்டு கேட்பேன். என் லிஸ்ட்ல நிறைய தமிழ் பாட்டு இருக்கும். குறிப்பா ‘3’ பட எல்லா பாட்டும் இருக்கு. இப்ப ‘என் செல்லக் குட்டியே...’. உண்மையைச் சொல்லணும்னா தமிழ் சினிமாவுல வேலை செய்யற ஆசையே பாடல்கள் காரணமாதான் உண்டாச்சு.
அடுத்த படம்..?
‘பார்டர்’ படத்துக்கு அப்பறம் நிறைய படம் வந்திருக்கு. ஆனா, ‘பார்டர்’ ரிலீசுக்கு வெயிட்டிங். அப்பறம்தான் ஒரு தெளிவு கிடைக்கும்.
ட்ரீம் ரோல்..?
எங்க வீட்ல எல்லாரும் படிப்ஸ். நடிகை ஆவேன்னு நினைச்சுக் கூட பார்க்கலை. நான் நடிக்கறதே கனவுதான். கூடவே ஹிஸ்டாரிக்கல் பட நாயகியாக நடிக்கணும்.
கிரஷ்..?
அப்படிப் போடு.. தளபதி விஜய்தான் ஆல்டைம் ஃபேவரைட்! அவர் டான்ஸ்... ஓ மை காட். ஒரு டூயட்டாவது அவர் கூட ஆடணும்.
ஃபிட்னஸ் சீக்ரெட்..?
டான்ஸ்... டான்ஸ்... டான்ஸ். அப்புறம் வீட்டு சாப்பாடு.
ஓய்வு நேரம்..?
அப்பா பைக்கை எடுத்துட்டு ரவுண்டு போயிடுவேன். இன்னொரு ஹார்ட் பீட், மியூசிக்.
பிடிச்ச இடம்..?
பீச். அதனாலேயே தமிழ்ப் படங்கள்ல நிறைய நடிக்கணும். இங்கேதான் பீச் இருக்கு.
ஷாலினி நியூட்டன்
|