கடல் கடந்து கலை பரப்பும் இளைஞர்!
கோலிவுட்டுக்கு ஒரு பிரபுதேவா போல் பாண்டிச்சேரிக்கு துளசிராம். பாண்டிக்காரரான துளசி ராம் நடனத்திலும் யோகாவிலும் நிபுணர். சினிமாவுக்கு வராமலேயே யுவன் ஷங்கர் ராஜா, ஆண்ட்ரியாவுடன் பணிபுரிந்த அனுபவம் இவருக்கு உண்டு. அமெரிக்காவில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் யுவனுக்கும், ஆண்ட்ரியாவுக்கும் டான்ஸ் மூவ் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. அமெரிக்காவின் மேடை நிகழ்ச்சிகளில் அதிகம் ஆக்கிரமித்துள்ள துளசி, சமீபத்தில் ‘மந்திரிச்சி விட்டதுபோல் எப்போதுமே போன்’ என்ற ஆல்பத்தை இயக்கி நடித்திருப்பதுடன் நடனமும் அமைத்திருக்கிறார்.
 போன் நம்முடைய நேரத்தை எப்படியெல்லாம் சுரண்டுகிறது என்பதை உணர்த்தும் இந்தப் பாடலுக்கு வசந்த் வசீகரன் இசையமைத்துள்ளார். பத்து வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகள் பாடியுள்ளனர். ‘‘ரஜினி சார்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். தனுஷ் என் ரோல் மாடல். இவ்விருவரும் திறமையால் மட்டுமே சிகரம் தொட்டவர்கள். அவர்களுடைய வெற்றி என்னைப்போன்ற இளைஞர்களுக்கு சினிமாவில் ஜெயிக்க உத்வேகம் கொடுத்துள்ளது...’’ என்கிறார் துளசி.
எஸ்.ராஜா
|