வலைப்பேச்சு



@GreeseDabba2 - வீக்எண்டில் பீச், சினிமா தியேட்டர், கோயில், ஷாப்பிங் மால், டிஸ்கோதே என்று செல்லாத இடமெல்லாம் சென்று விட்டு, வீட்டுக்கு வந்ததும் மறக்காமல் சோப்பு போட்டு 20 செகண்டு கை கழுவி கொரோனாவிலிருந்து தன்னை காத்துக் கொண்டான் விழிப்புணர்வுள்ள தமிழன்!

@Kozhiyaar - மனைவியின் குடும்ப WhatsApp groupல் இருப்பது இரட்டை ஆயுள் தண்டனைக்கு சமம்!

@Giri47436512 - ‘மூட்டை தூக்கத்தான் லாயக்கு’ அப்பா சொன்னது எவ்வளவு உண்மை.என் புள்ளையோட ஸ்கூல் பேக்கை தூக்கிட்டு போறதத்தான் சொல்லிருக்காரு... என்னா வெயிட்டு!

@HariprabuGuru - கண்ணு, மூக்கு, வாய்னு எதுக்கு பிரச்னை வந்தாலும் கண்ணாடி, மாஸ்க்னு எல்லாத்தையும் தாங்குற காதுக்கு ஒரு பிரச்னை வந்தா அதையும் அதேதான் தாங்கணும். குடும்பத் தலைவன் மாதிரி.

@RajaAnvar_Offic - இப்பல்லாம் சமையல் செய்தவர்களுக்கு பாராட்டு, நல்லாருக்குன்னு சொல்ற ஒரு வார்த்தை, நாம பண்ற ‘Like’ மட்டுமே!
யூடியூப் பரிதாபங்கள்!

@THARZIKA - மரத்திலிருந்து கீழே விழுந்த ஒற்றை பழுத்த இலையின் கீழ் இன்னமும் மிச்சம் இருக்கிறது கொஞ்சம் நிழல்.

@Aruns212 - பள்ளி வாசலில் இறக்கிவிடப்படும் போது, குழந்தைகள் பெற்றோருக்குத் தரும் முத்தத்தில் 100% அன்பு மட்டுமே இருக்கிறது.

@Kadhar_Twitz - வச்சிருக்கது பழைய மாடல் TVS 50, இதுல ‘பாத்து வா பங்காளி கல்யாணம் ஆகல கருமாதி ஆகல’னு ஸ்டிக்கர் வேற...

@anand17m - உங்கள் வெற்றி தோல்வியை முடிவு செய்வது குருப்பெயர்ச்சியோ சனிப்பெயர்ச்சியோ அல்ல. உங்கள் முயற்சியும், பயிற்சியும்தான்...

@Annaiinpillai - இரவில் கதை கேட்டு தூங்கிய கண்கள் இப்பொழுது செல்போனின் கண்களுக்கு விருந்தாகிக் கொண்டிருக்கின்றன..!

@manipmp - இரண்டு பெண்கள் அருகருகே அமைதியாய் அமர்ந்திருந்தனர்.மாமியார் - மருமகள்.

@saravananucfc - மகளைக் கொஞ்சிவிட்டு தெரியாமல் டீ குடிச்சிட்டேன்... இனிப்பே இல்லை..!

@Bogan Sankar - பெண்களிடம் சொல்லக்கூடாத வெடிகுண்டு வார்த்தை ‘எல்லாப் பெண்களையும் போல நீ...’ என்பது. ஒவ்வொரு பெண்ணும், தான் எல்லா பெண்களும் போல அல்ல என்று நம்புகிறாள். எல்லா பெண்களும் தாங்கள் எல்லா பெண்களையும் போல அல்ல என்று தீர்மானமாக நம்புகிறார்கள். இப்படிப்பட்ட பெண்களிடம் மாட்டிக்கொண்டு முழித்த எவனோதான் ஹோட்டல் மெனுவில் இப்படியொரு கேட்டகிரியை உருவாக்கியிருக்க வேண்டும்.
ஸ்பெஷல் சாதா தோசை!

@selvachidambara - யாருடைய கண்ணீரையோ சினிமாவிலோ, சீரியல்களிலோ, மேடைப்பேச்சுகளிலோ பார்த்தவுடன் பொசுக்கென்று கண்ணீர் விடுகின்ற வெள்ளை மனம் படைத்த சாதாரண மனிதர்கள்தான் நாம். ஆனால், ஏனோ நம் அருகாமை உறவு, நட்புகளிடம் மட்டும் வீம்பு காட்டுகிறோம்...

@itz_idhayavan - பணக்காரனுக்கு தரத்தின் மீதும் ஏழைக்கு விலைப்பட்டியல் மீதும் கண்...

@prabhu65290 - ‘சாப்ட்டாச்சா’னு ஒருத்தர்கிட்ட கேட்பதில் என்ன இருக்கிறது? பசித்தால் அவரே சாப்பிடப் போகிறார் எனலாம்...

அதை கேட்கக் கூட ஆள் இல்லாதவர்களுக்குத்தான் தெரியும் அந்த தனிமையின் வலி.
@senbalan - படிக்கும்போது என்னவாகணும்னு ஆசைப்பட்டீங்க?
மணி நாலாகணும்னு!

@Karundhel Rajesh - History repeats itself. Blake Snyder தனது ‘save the cat’ புத்தகத்தில் திரைக்கதை பத்தி இதை சொல்லிருப்பாரு. என்னன்னா, MKTக்கு பதில் MGR. MGRக்கு பதில் ரஜினி. இப்படி ஜெமினி கணேசனுக்கு பதில் கார்த்திக். சிவாஜிக்கு பதில் கமல். கமலுக்கு பதில் விக்ரம். ரஜினிக்கு பதில் அஜித் & விஜய். இப்படி எந்த பெர்சனாலிட்டியாக இருந்தாலும் இன்னொரு பெர்சனாலிட்டி அதே இடத்தை நிரப்ப வருவார்.

அப்படி, கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால், வெளிநாடுகளில் இந்தியா பின்னிய டெஸ்ட்களை எடுத்துக்கொண்டால், கவாஸ்கரின் இடத்தில் ரோஹித் & KL ராகுல், கபில் தேவின் இடத்தில் பும்ரா & ஷமி, ரோஜர் பின்னியின் இடத்தில் (இப்போதைக்கு) ஷர்துல், வெங்சர்க்காரின் இடத்தில் சேதேஷ்வர் புஜாரா, அமர்நாத்தின் இடத்தில் (லேசாக) ரவீந்தர் ஜடேஜா, அசாருதீனுக்கு பதில் அஜிங்க்யா, கிர்மானியின் இடத்தில் ரிஷப் பண்ட், சேதன் சர்மாவின் இடத்தில் உமேஷ் யாதவ் & சிராஜ் என்று பக்காவாக அப்படியே பொருந்துவதைக் காணலாம். இவர்களில் பழைய நபர்கள் எப்படி விளையாடினார்கள் என்பதை வைத்தே இந்த comparison.

இதில் கோலி என்பவர் அப்படியே கங்குலி (plus கொஞ்சம் சச்சின்). புஜாராவிடம் கொஞ்சம் டிராவிட்டின் சாயலும் உண்டு. இதுதான் நியதி. History repeats itself always. தவறவே தவறாது.

@NameisSoni - புருஷ்: நடக்க முடியாத அளவுக்கெல்லாம் பிரச்னை இல்ல. ஒரு விரல்தான் லைட்டா வீங்கிருக்கு...  தைலம் தேய்ச்சா நாளைக்கே சரியாகிரும்...
மீ: இப்ப நீ காப்பி போட்டுத் தருவியா... மாட்டியா?!

@Anasuya M S - 5 மாசம் கழிச்சு இந்த insta கணக்கை reactivate பண்ண நான்பட்ட பாடு இருக்கே... Password reset பண்ணலாம்னு பார்த்தா, recovery mail பழைய yahoo id. அதோட பாஸ்வேர்ட் மறந்து போய் அதோட recovery email ஐத் தேடி... உஃப்ப்ப்ப்... insta account password reset பண்ணப் போய் காலேஜ் படிச்சப்ப உண்டாக்கின yahoo idஐ எல்லாம் உயிர்ப்பிச்சு எழுப்பிட்டு வந்தாச்சு...Insta boys... password resetக்கு எதுக்குடா இம்புட்டு protocol வச்சிருக்கீங்க... மிடில!

@mozhi221087 - கஷ்டப்பட்டு நடிக்காம... இஷ்டமா இயல்பா பேசினா ஆயிரம் உறவுகள் கிடைக்கும்...

@LAKSHMANAN_KL - நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் உரிய நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும்! - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு கிடைச்ச மாதிரியா?!

@Shan Karuppusamy - ஜெ உயிரோடு இருந்த காலத்தில் சமூக வலைத்தளங்களில் நடப்பதெல்லாம் அரசியலைப் பாதிக்காது, கள நிலவரம் வேறு என்று சொல்லி வந்தார்கள். இன்று சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு வீடியோ ஒரு தேசிய கட்சியையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் தொடர்ந்து கள அரசியலில் முக்கிய பதவிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இணையம் அரசியலை பாதிக்கத் தொடங்கிவிட்டது. களத்தில் இருக்கும் பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்பும் கருவியாக இணையம் மாறிவிட்டது.

அதையும் தாண்டி டிரம்ப் அதிபரானபோது இணையத்தின் மூலம் தங்களுக்கு வேண்டிய ஒருவரை தங்களுக்கு வேண்டப்படாத ஒரு நாட்டின் அதிபராக்கி அழகு பார்த்துவிட்டது ரஷ்யா. கிட்டத்தட்ட ஒரு உள்நாட்டுப் போருக்கு அருகில் சென்று வந்தது அமெரிக்கா. இந்த வலைப்பின்னல் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட சக்தி வாய்ந்தது. இதைப் புறங்கையால் ஒதுக்குபவர்கள் விரைவில் ஒதுக்கப்படுவார்கள்.

@Paadhasaari Vishwanathan - கிளையைப் பற்றுவது தொங்கத்தானே! பற்று எதுவுமே அந்தரத் தொங்கலாக்கும்.

@saravankavi - ஆப்கானிஸ்தான் விவகாரம்: உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
டூர் இப்பவே போகலாமா, இல்ல இன்னும் நாளாகுமான்னு பார்த்து சொல்லுங்க...@saravankavi - ஆப்கானிஸ்தான் விவகாரம்: உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
டூர் இப்பவே போகலாமா, இல்ல இன்னும் நாளாகுமான்னு பார்த்து சொல்லுங்க...

@mohanramko - ஏதேதோ போராட்டம் பண்றீங்களே, மக்கள் பிரச்னைக்கு போராட்டம் பண்ண மாட்டீங்களா?
மக்களேதான் பிரச்சினை... போவியா!

@Shobana Narayanan - நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது விநோதமான பழக்கம் இருக்கும்ல... நான் யார் தயிர் உறை ஊற்றினாலும் சாப்டமாட்டேன். நானே ஊற்றியதுனா மட்டும்தான். என்ன காரணம்னு இப்ப வரை தெரியாது. ஆனா, ஒரு அவர்ஷன், தானா வரும். அதேபோல என் தோழி ஒருத்தி தோசை பிஞ்சு போயிட்டா சாப்ட மாட்டா.

கணவருக்கு ஒரு விநோத பழக்கம். ஒரே குலைல காய்ச்ச இரண்டு இளநீர் சாப்ட்டாதான் அவருக்கு சளிபுடிக்காதுனு ஒரு நம்பிக்கை. குலை இல்லாம தனியா உள்ள இளநீரை சாப்பிட மாட்டார்.இப்படியாக எத்தனையோ சில்லியான விஷயங்கள ஃபாலோ பண்றோம்ல... வாழ்க்கை விநோதமானதுதான்.

@அ. பாரி - என் மகள் அவளே தயாரித்த உணவு ஒன்றை கொண்டு வந்து டேஸ்ட் பார்க்கச் சொன்னாள். ஆர்வமாக பார்த்தேன். வாய் ஊறியது. கடகடவென எடுத்து சுவைத்தேன். ரசித்துச் சாப்பிடுவதைப் பார்த்ததும், ‘நானே பண்ணேன்ப்பா...’ என்று பெருமிதமாய் சொன்னாள். ஒண்ணுமில்ல, உப்பு மாங்காய்தான்.

மீன் குழம்பில் போட வெட்டிய மாங்காயில் ஒரு கீற்றை சிறு துண்டுகளாக வெட்டிக் கொடுத்திருக்கிறார் வீட்டம்மணி. அதை ஒரு கிண்ணத்தில் போட்டு, உப்பு, காய்ந்த மிளகாய்
கிள்ளிப் போட்டு குலுக்கி எடுத்துட்டு வந்துதான் இந்த ‘நானே பண்ணேன்ப்பா...’  வீடியோ ஒண்ண போட்டுட வேண்டியதுதான்..!