அஜித்...ஒன் மேன் ஆர்மி!
சினிமா தவிர்த்து சோஷியல் மீடியா, ரியாலிட்டி ஷோ என்று எப்போதுமே தன்னை ஆக்டிவ் மோடில் வைத்திருப்பவர் சாக்ஷி அகர்வால். செலிபிரிட்டியாக இருந்தாலும் மீடியாக்காரர்களிடம் ஃப்ரெண்ட்லியாக அப்ரோச் பண்ணக்கூடியவர். ‘தி நைட்’ போஸ்டர் மிரட்டலாக இருந்ததே?தேங்க்ஸ்.
 இது நான் நடிக்கும் முதல் அனிமல் த்ரில்லர். தமிழ் சினிமாவுக்கு புதுமையான களம். வார்த்தைக்காக சொல்லவில்லை. அதுதான் நிஜம். ஒரு கமர்ஷியல் சினிமாவுல இருக்க வேண்டிய எமோஷன், லவ், ஹாரர்னு எல்லா மேஜிக் எலிமென்ட்டும் இருக்கு. ஹீரோ விது. வில்லனாக ரன்வீர் குமார் பண்றார். ‘ஜாங்கிரி’ மதுமிதாவுக்கு வித்தியாசமான கேரக்டர். 
டெக்னிக்கலாகவும் படம் வேற லெவலில் வந்திருக்கு. சிஜி, வி.எஃப்.எக்ஸ். காட்சிகள் பேசப்படும். ‘குட் ஹோப் பிக்சர்ஸ்’ கோகுல கிருஷ்ணன், ‘கலசா’ செல்வம் தயாரிச்சிருக்காங்க. ரங்கா புவனேஷ்வர் இயக்கியிருக்கிறார். ரமேஷ் கேமரா பண்ணியிருக்கிறார். அன்வர் மியூசிக் பண்ணியிருக்கிறார். புது டீம் மாதிரி இருந்தாலும் டெக்னிக்கலா ஸ்ட்ராங்கான படம்.
இந்தப் படம் மியூசிக் டைரக்டர் கம் ஹீரோ விது மூலம் வந்தது. ‘சிண்ட்ரெல்லா’ படம் பண்ணும்போது விது பழக்கம். அப்போது அவர், ‘நான் ஹீரோவா நடித்தால் நீங்கதான் ஹீரோயின்’ என்றார். சொன்னமாதிரி இந்தக் கதையில் நடிக்கக் கேட்டார். அனிமல் த்ரில்லரில் நான் நடிச்சதில்லை. அதனால் ஆர்வத்தோட ஓ.கே.சொன்னேன்.
இயக்குநர் கதையை ஃபோனில் சொன்னார். படத்துல ஒரு ஓநாய் நடிச்சிருக்கு. அதுதான் இந்தப் படம் பண்ணக் காரணம். கிட்டத்தட்ட வுமன் சென்ட்ரிக் மாதிரியான இதில் கதையோட வெயிட், ஹீரோயின் தோள் மேலதான் இருக்கும். என்னுடைய கேரக்டருக்கு நிறைய சேலஞ்ஜ் காத்திருந்தது. இரண்டாம் பாதி முழுதும் காட்டில் படமாகியது. அட்டை, வண்டு என்று பூச்சிக் கடியோட தழும்பு இப்பவும் இருக்கு. படப்பிடிப்பு நடந்த கேரள வனப்பகுதியில் தடுக்கி வீழ்ந்தால் ஏரி, குளத்தில்தான் விழ வேண்டும். அப்படி கேரக்டருக்காக ஆழம் தெரியாத ஏரிகளில் இறங்கியது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகமாக்கியது.
ரூம் டூ லொகேஷனுக்கு காட்டு வழியாக நடந்து போகணும். பாதையும் இருக்காது. வண்டியிலும் போக முடியாது. காலையில் ஐந்து மணிக்கு சென்றால் ரிட்டர்ன் வருவதற்கு நைட் பத்தாகிவிடும். அந்த மிட் நைட் டிராவல் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத கடினமான பொழுதுகள். வேற என்ன படங்கள் பண்றீங்க?பிரபுதேவாவுடன் ‘பகீரா’, எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘நான் கடவுள் இல்லை’, சுந்தர்.சி.யின் ‘அரண்மனை 3’.
இப்போது நிறைய கதைகள் கேட்கிறேன்.சினிமாவுக்கு 2013ல் வந்தீர்கள். இந்த டிராவலை எப்படி திரும்பிப் பார்க்கிறீர்கள்?இவ்வளவு சீக்கிரம் 9 வருடங்கள் கடந்தது ஆச்சர்யமே. இந்த வருடம் இது, அடுத்த வருடம் அது என்று இலக்கு வைத்து டிராவல் பண்ணமாட்டேன். என்னுடைய பார்வை எப்படியிருக்கும் என்றால், இவ்வளவு வருடங்களில் என்னுடைய வளர்ச்சி எப்படி இருந்தது என்று பார்ப்பேன். எல்லா நாளையும் வளர்ச்சியாகப் பார்க்கிறேன். வெற்றி - தோல்வி அவரவர் பார்வையில் மாறுபடும். ஒவ்வொரு படத்திலும் எனக்குள் மாற்றங்கள் நிகழ்வதைப் பார்க்க முடிகிறது. ‘தி நைட்’ படத்தில் எமோஷனல் காட்சியை ஒரே டேக்கில் முடித்தேன். இவ்வளவு வருட பயணத்தையும் கற்றலுக்கான களமாகவே பார்க்கிறேன்.ஒரு ஆர்ட்டிஸ்ட்டாக யாருடைய வளர்ச்சி உங்களை வியக்க வைக்கிறது? தனுஷ். ஆக்டிங் பாயிண்ட்ல அவருடைய கிராஃப் பிடிக்கும். அவர் இண்டஸ்ட்ரிக்கு வரும்போது நெகடிவ் கமெண்ட்ஸ் நிறைய வந்தது. அதை ஆக்டிங் ஸ்கில்லால் மாத்திக்காட்டினார். இப்போது ஹாலிவுட் வரை போய்விட்டார்.
தனிப்பட்ட விதத்துல அஜித். ஒன் மேன் ஆர்மி. எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தார். ‘விஸ்வாசம்’ டைம்ல மீட் பண்ணியிருக்கிறேன். நடிப்பு, பழகும் விதத்தில் ஜெம். என்னுடைய ஃபோக்கஸ் எப்போதும் ‘தல’ மேல.நடிகைகள் சமூக வலைத்தளங்களில் கருத்து சொல்லி ஜெயில் வரை போவது பற்றி?சோஷியல் மீடியா கிரேட் மீடியம்.
ரசிகர்களைத் தொடர்பு கொள்ள, அப்டேட் கொடுக்க, கனெக்ஷனில் வைத்திருக்க யூஸாகிறது. அதை யூஸ்ஃபுல் டூலாகவே நான் பார்க்கிறேன். ஜெயில் மேட்டரைப் பொறுத்தவரை கான்ட்ரவர்ஸி வேணும் என்கிறவர்களை அப்படித்தான் வழி நடத்தும். நல்லதோ, கெட்டதோ, நம் முடிவுதான் தீர்மானிக்கும். நெகட்டிவிட்டியை எப்படிப் பார்க்கிறீர்கள்? விஜய் சார் சொன்ன மாதிரி... அந்த மாதிரி செய்திகளைப் புறந் தள்ளிடணும். ரியாலிட்டி ஷோவிலிருந்து வெளியே வந்த பிறகு நெகட்டிவ், பாசிட்டிவ் கமெண்ட் நிறைய வந்தது. சிலர் ட்ரோல் பண்ணினார்கள். அது எனக்குத்தான் நல்லது. ஏன்னா, நாம் எவ்வளவுக்கு எவ்வளவு ட்ரோல் பண்ணப்படுகிறோமோ அவ்வளவும் நம்மை செல்வாக்கான மனிதர் என்ற இடத்துல கொண்டுபோய் உட்கார வைத்துவிடும்.‘காலா’வில் ரஜினியுடன் நடித்தீர்கள். அவரிடம் என்ன கற்றுக் கொண்டீர்கள்?
மூணு விஷயம் கத்துக்கிட்டேன். முதல் விஷயம், டவுன் டூ எர்த் பெர்சன். ரஜினி சாரை சிம்பிள் மேன் என்று சொல்வாங்க. அதை அருகில் என் கண்கள் வழியாகப் பார்த்தபோது சிலிர்த்துப் போனேன். நம்பர் 2, ஒழுக்கம். முழு நாள் படப்பிடிப்பு இருந்தாலும் எனர்ஜி லெவல் குறையாது.அடுத்து, அவருடைய ஷேரிங். ‘பாபா’, ‘எந்திரன்’ படங்களின்போது நடந்த சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொள்வார்.
அதிலிருந்து நிறைய டிப்ஸ் எடுக்க முடியும். அவர் வாழ்க்கையில் நடந்த பிரச்னைகளைக் கையாண்ட விதம் பற்றியும் சொல்லியிருக்கிறார்.நடிகர்கள், இயக்குநர்கள் விஷ் லிஸ்ட் இருக்கிறதா?‘தல’ கூட டூயட் பாடணும். ஒரு நாள் அந்த லட்சியத்தை அடைவேன். புது இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அவர்களிடமும் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
எஸ்.ராஜா
|