தினமும் படகு ஓட்டி பள்ளிக்கு செல்லும் மாணவி!
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ராம்பூரில் கனமழையால் ஆற்றில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த கிராமத்தில் உள்ள 11ம் வகுப்பு மாணவி சந்தியா சாஹினி, வீட்டில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் உள்ள தனது பள்ளிக்குச் செல்ல தினமும் ஆற்றில் படகை ஓட்டிச் செல்கிறார். பள்ளிச்சீருடையில் மாணவி படகில் பயணம் செய்யும் இக்காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.
 ‘‘கொரோனா தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் பள்ளி நீண்ட காலமாக மூடப்பட்டது. இப்போது வெள்ளத்தின் சவாலை எதிர்கொள்கிறோம். என்னிடம் ஸ்மார்ட்போன் இல்லாததால் என்னால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது கனமழையால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. எனது படிப்புக்காக நான் முழுமையாக பள்ளியை நம்பி உள்ளேன். அதனால் நான் படகில் பள்ளியை அடைய முடிவு செய்தேன்...’’ என்கிறார் சந்தியா சாஹினி.
காம்ஸ் பாப்பா
|