பாஹி 3



ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளியான ‘பாஹி’ இந்திப்படம் செம ஹிட் அடித்தது. இதன் தொடர்ச்சியாக 2018ல் வெளியான ‘பாஹி 2’வும் வசூலை அள்ளியது. இதன் அடுத்த பாகமான ‘பாஹி 3’, ‘ஹாட் ஸ்டாரில்’ வெளியாகி பார்வைகளைக் குவித்து வருகிறது.
ரொம்பவே ஆத்திரக்காரன் ரூனி. கரடுமுரடான சுபாவம் கொண்டவன். ஆனால், அண்ணன் விக்ரம் என்றால் தம்பி ரூனிக்கு உயிர். இருவருக்கும் காதலிகள் கிடைக்கின்றனர். சகோதரர்கள் இருவரின் வாழ்க்கையும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் ஜாலியாகப் போகிறது.

இந்நிலையில் விக்ரமிற்கு ஒரு வேலை விஷயமாக தம்பி யைப் பிரிந்து சிரியா வரை தனியாகப் போகவேண்டிய சூழல். சிரியாவில் இருக்கும் சில தீவிரவாதிகளால் விக்ரம் கடத்தப்
படுகிறார். விஷயம் அறிந்த ரூனி, அண்ணனைத் தேடி தனியாளாக சிரியாவுக்குச்  செல்கிறான். அங்கே அவனுக்கு காவல்துறை கூட உதவ முன்வருவதில்லை.

தீவிரவாதிகளிடமிருந்து அண்ணனை எப்படி ரூமி காப்பாற்றுகிறான் என்பதே ஆக்‌ஷன் திரைக்கதை. தமிழ் ‘வேட்டை’ படத்தையே அக்மார்க் பாலிவுட் மசாலாவாக உருவாக்கியிருக்கிறார்கள். ரூனியாக ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார் டைகர் ஷெராப். படத்தின் இயக்குநர் அகமத் கான்.