இன்ப அதிர்ச்சி



மே 13...சன்னி லியோனின்  பிறந்தநாள்.  அவருடைய ரசிகர்கள்  ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு வகையில் இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்கள். அந்த வகையில் கர்நாடக மாநில மாண்டியா மாவட்ட சன்னி லியோன் ரசிகர்கள் சன்னியையே இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடச் செய்துள்ளனர்.
அதாவது சன்னி லியோன் ரசிகராக இருந்தால் அவர்களுக்கு இறைச்சி வாங்கும் போது 10% தள்ளுபடி. டிகே சிக்கன் என்னும் இறைச்சிக் கடை நடத்தும் பிரசாத் இதுபற்றிக் கூறுகையில் ‘நீங்கள் சன்னி லியோனின் ரசிகராக இருந்தாலும், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் சன்னி லியோனைப் பின்தொடர்ந்தால் மட்டுமே தள்ளுபடியைப் பெற முடியும்.

சன்னி லியோன் நடித்த படத்திற்கு சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருக்க வேண்டும்” என்கிறார். மட்டுமல்ல, அதே மாண்டியா மாவட்டம் கொம்மரேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அவரது ரசிகர்கள், 20 அடி உயர சன்னிலியோன் படம் பொறித்த பேனர் கட்டி கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அத்துடன்  ரத்ததானமும் வழங்கியுள்ளனர். இந்த கிராமத்து இளைஞர்கள் ஒருசேர சொல்வது- ‘என்னதான் சன்னி லியோன் ஆபாசப் படங்களில் நடித்தாலும், இப்போது இந்தி நடிகை. மேலும் அவர் செய்து வரும் தொண்டுகளும், சேவைகளும் தங்களுக்கு அவர் மேல் மரியாதையை உண்டாக்கியுள்ளது’ என்கின்றனர். இதனைப் பார்த்த சன்னி லியோனும் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த கிராம இளைஞர்களுக்கு நன்றி சொல்லி பதிவிட்டுள்ளார்.

ஷாலினி நியூட்டன்