103 வயதில் ஸ்கை டைவிங்!
சாதிப்பதற்கு தீராத ஆர்வமும், மன உறுதியும் இருந்தால் போதும். வயது ஒரு தடையே இல்லை. இதற்கு சாட்சியாக நம் முன் நிற்கிறார் ரட் லார்ஸன். ஸ்வீடனைச் சேர்ந்த இந்தப் பெண்மணிக்கு 100 வயதில் பாராசூட்டில் இருந்து குதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. உடனே அது சம்பந்தமான தேடல்களில் இறங்கிய ரட், நல்ல பயிற்சியாளர் ஒருவரைப் பிடித்தார்.

ஆரம்பத்தில் ரட்டின் வயது காரணமாக தயங்கிய பயிற்சியாளர், இந்த வயதிலும் அவருக்குள் இருக்கும் மன உறுதியைப் பார்த்து மிரண்டு போய்விட்டார். மூன்று வருடங்களுக்கு மேலாக கடுமையான பயிற்சிக்குப் பிறகு, பயிற்சியாளரின் உதவியுடன் அந்தரத்தில் பாராசூட் மூலமாக ஸ்கை டைவிங் செய்து சாதித்துள்ளார் ரட்.
தான் பிறந்து 103 ஆண்டுகள், 259 நாட்கள் ஆகிய நிலையில் இந்த அரிய நிகழ்வை நிகழ்த்தியிருக்கிறார் ரட். உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற கின்னஸ் சாதனையையும் தன்வசமாக்கிவிட்டார். பாராசூட்டிலிருந்து பூமியில் ரட் இறங்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
த.சக்திவேல்
|