உலகின் அதிக வயதான நாய்!
பொதுவாக நாய்களின் சராசரி ஆயுட்காலம் என்பது 10 முதல் 13 வருடங்கள் தான். அதுவும் சரியான பராமரிப்பும், கவனிப்பும் இருந்தால் மட்டுமே இத்தனை ஆண்டுகள் வாழும். ஆனால், அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஜூலியின் வீட்டில் வளரும் பெப்பிள்ஸ் என்ற நாய் 22 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறது. மார்ச் 28, 2000-ம் வருடம் பிறந்த இந்த பெப்பிள்ஸ் ‘உலகின் அதிக வயதான நாய்’ என்ற கின்னஸ் சாதனையைத் தன்வசமாக்கியிருக்கிறது.
 இவ்வளவு வருடங்கள் ஒரு நாயால் வாழ முடியுமா என்ற நிபுணர்கள் ஆச்சர்யத்தில் உறைந்துபோயிருக்கின்றனர். சுறுசுறுப்புக்கும், பயமின்மைக்கும் பெயர் போன ஃபாக்ஸ் டெர்ரியர் இனத்தைச் சேர்ந்த பெப்பிள்ஸ் பகல் முழுவதும் உறங்கும் பழக்கம் கொண்டது. இரவில் ஒரு நிமிடம் கூட தூங்காது. இதற்குமுன் டோபி கீத் என்ற நாய் 21 ஆண்டுகள் வாழ்ந்ததே சாதனையாக இருந்தது.
த.சக்திவேல்
|