மீசைக்காரி!



ஆமாம். மீசை கம்பீரத்தின் அடையாளம்; மீசை வீரத்தின் அடையாளம்; மீசை ஆண்மையின் அடையாளம் என்ற மீசை குறித்த ஆணாதிக்க கருத்துக்களை உடைத்தெறிந்திருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த 34 வயதான ஷைஜா.
கண்ணூர் சோலையாடு பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு பள்ளிப் பருவத்தின் இறுதியில் உதட்டுக்கு மேலே லேசாக அரும்பு மீசை துளிர்க்கத் தொடங்கியுள்ளது. தொடக்கத்தில் அவர் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நாளடைவில் மீசை சற்று அடர்த்தியாகவே வளரத் தொடங்கியது.

இதனால் ஷைஜாவை அனைவரும் கேலியும் கிண்டலுமாக அவமானப்படுத்தியுள்ளனர். மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளானவர் ஒரு கட்டத்தில் இது இறைவன் தனக்களித்த பரிசு எனக் கருத ஆரம்பித்துவிட்டார்.  திருமண வயதை எட்டியபோது பாலக்காடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருடன் அவருக்கு கல்யாணம் நிச்சயமானது.

மணமகனிடம் வெளிப்படையாக தன் மீசை ஆசையை ஷைஜா தெரிவிக்க, லட்சுமணனும் பச்சைக்கொடி காட்ட...இதோ இப்பொழுதும் மீசையை முறுக்கியபடி வலம் வருகிறார் ஷைஜா.
ஷைஜா - லட்சுமணன் தம்பதிக்கு அஷ்விகா என்ற மகள் உள்ளார். மொத்த குடும்பமும் ஷைஜாவின் மீசை வளர்க்கும் ஆசைக்கு உறுதுணையாக உள்ளனர்.

காம்ஸ் பாப்பா