முதல் சீக்கிய மாடல்!



இங்கிலாந்தில் 150 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் ஃபேஷன் நிறுவனம், ‘பர்பரி’. ஹாலிவுட் நட்சத்திரங்களிலிருந்து இந்தியப் பணக்காரர்கள் வரையிலான பிரபலங்கள் எல்லோரும் இதன் வாடிக்கையாளர்கள். இந்நிறுவனத்தின் தயாரிப்பு வெளிவருவதற்கு முன்பே முன்பதிவு செய்து காத்திருக்கும் பிரபலங்களும் இருக்கிறார்கள்.
அந்தளவுக்குப் புகழ்பெற்ற ஆடம்பர ஃபேஷன் நிறுவனம் இது.  ரெடிமேட் ஆடைகள், வாசனைத் திரவியங்கள், தோல் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், காலணிகள், குழந்தைகளுக்கான ஆடைகள், பொம்மைகள் மற்றும் ஃபேஷன் பொருட்கள்... என்று இதன் தயாரிப்பு பட்டியல் நீள்கிறது.

நன்கு அனுபவம் வாய்ந்த மாடல்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள்தான் ‘பர்பரி’யின் விளம்பரங்களுக்கு மாடல்களாகவும், அம்பாஸிடர்களாகவும் இருக்கின்றனர்.
குழந்தைகளுக்கான ஃபேஷன் பொருட்களுக்கான மாடலைப் பிடிப்பதில் பெரும் தேடுதல் வேட்டையே நடத்துகிறது ‘பர்பரி’.

இந்நிலையில் லண்டனில் வாழும் நான்கு வயதான சாகிப் சிங், ‘பர்பரி’யின் குழந்தைகள் டிபார்ட்மெண்ட்டுக்கு மாடலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘பரிபரி’யின் முதல் சீக்கிய மாடல் என்ற பெருமையைத் தன்வசமாக்கியுள்ளார் சாகிப் சிங்.

த.சக்திவேல்