பணம் அச்சடிக்க லைசென்ஸ்!



புதிதாக தொழில் தொடங்கப் போகிறீர்களா? இல்லை இப்போது செய்துகொண்டிருக்கிற தொழிலில் பெரிதாக லாபம் இல்லையா? கவலையை விடுங்கள். எதைப் பற்றியும் யோசிக்காமல் லித்தியம் பிசினஸில் இறங்குங்கள்.
எலெக்ட்ரிக் கார் முதல் ஸ்மார்ட் போன், ஹெட்போன்... என பல எலெட்க்ரானிக்ஸ் பொருட்களில் பயன்படுத்தும் பேட்டரிகளில் முக்கிய மூலக்கூறாக இருப்பது லித்தியம்தான். இந்த உலோகத்தை பேட்டரிக்குத் தகுந்த மாதிரி சுத்திகரிப்பு செய்துதரும் நிறுவனங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

மட்டுமல்ல, கடந்த ஜனவரியிலிருந்தே லித்தியத்தின் விலை இரண்டு மடங்காகியிருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட லித்தியத்தின் விலை சுமார் 400 சதவீதம் அதிகரித்துள்ளது. தவிர, பேட்டரிக்கு உகந்த லித்தியத்துக்கான தேவை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில்தான் ‘‘லித்தியம் பிசினஸில் முதலீடு செய்பவர்களுக்கு நஷ்டமே இருக்காது. உங்களுக்குப் பணம் அச்சடிக்க லைசென்ஸ் கிடைத்த மாதிரி...’’ என்று சமீபத்தில் சொல்லியிருக்கிறார் உலகின் முதல் பணக்காரரான எலன் மஸ்க்.

த.சக்திவேல்