வீட்டில் தயாரிக்கப்பட்ட விமானம்!



கேரளாவில் பிறந்து லண்டனில் செட்டிலானவர் அசோக் அலிசெரில். இப்போது ‘ஃபோர்டு மோட்டார் கம்பெனி’யில் வேலை செய்து வருகிறார். அசோக்கிற்கு சிறு  வயதிலிருந்தே விமானத்தின் மீது பெருங்காதல். தனிப்பட்ட ஆர்வத்தில் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்று, 2018ல் பைலட் லைசென்ஸை வாங்கிவிட்டார். லைசென்ஸ் கிடைத்த பிறகு அடிக்கடி இரண்டு சீட் விமானத்தை வாடகைக்கு எடுத்து தனது மனைவியுடன் வானில் வலம் வருவது அவரது வழக்கம்.

அவரது இரண்டு மகள்களும் கொஞ்சம் வளர்ந்த பிறகு, நான்கு சீட் விமானம் தேவைப்பட்டது. ஆனால், இங்கிலாந்தில் நான்கு சீட் விமானம் வாடகைக்குக் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் பழைய மாடலாக இருந்தது. இந்நிலையில் லாக் டவுன் வந்தது. விமானத்தைக் கட்டமைப்பது குறித்து ஆராய்ச்சி செய்து, புத்தகங்களைப் படித்து வீட்டிலேயே விமானத்தைத் தயாரித்துவிட்டார்.

1.8 கோடி செலவில் இந்த நான்கு சீட் விமானத்தை தயாரிக்க 18 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் ஜெர்மனி, செக், ஆஸ்திரியாவைச் சுற்றி
வந்துவிட்டார். விமானத்துக்கு ‘ஜி-தியா’ என்று  தனது மகளின் பெயரை வைத்திருக்கிறார் அசோக்.

த.சக்திவேல்