தத்துவம் மச்சி தத்துவம் 1





‘‘நம்ம தலைவரை அனைத்துக் கட்சியினரும் அவமானப்படுத்திட்டாங்களா... எப்படி?’’

‘‘சபை முடிஞ்சும் அவரை யாருமே எழுப்பாம வந்திட்டாங்களாம்..!’’
- நா.கி.பிரசாத், கோவை.

‘‘கபாலிக்கு ரொம்பத்தான் வசதி கூடிடுச்சு போல...’’
‘‘எதை வச்சு சொல்றீங்க ஏட்டய்யா..?’’
‘‘போலீஸ்காரங்களுக்கெல்லாம் அவன் செலவுல குவார்ட்டர்ஸ் கட்டித் தர்றேங்கறானே!’’

- உ.குணசீல பாண்டியன், ராஜபாளையம்.


‘‘உன் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் உனக்கு எத்தனை வருஷம் தண்டனை கிடைக்கும்னு தெரியுமா?’’

‘‘நாலு ஆப்ஷன்ஸ் தந்தீங்கன்னா, கரெக்ட்டா சொல்லிடுவேன் எஜமான்..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘தலைவர் எப்போதும் போதையிலயே
மிதப்பார்னு எப்படிச் சொல்றே?’’
‘‘கட்சிக்காரங்க பேசும்போது அவரை ‘மிதப்புக்குரிய தலைவர்
அவர்களே’ன்னு சொல்றாங்களே..!’’
- எஸ்.கோபாலன், சென்னை-61.

என்னதான் விலையுயர்ந்த விமானம்னாலும், அதால ‘லேண்டிங்’தான் ஆக முடியும்; ‘பில்டிங்’ ஆக முடியாது!
- தத்துவ பில்டிங்கைக் கட்டபல கட்ட நடவடிக்கைகள்
எடுப்போர் சங்கம்
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

பின்னால பிறந்த தங்கச்சிக்கு முன்னால மாப்பிள்ளை பார்க்கறாங்க; முன்னால பிறந்த அண்ணனுக்கு பின்னால பொண்ணு பார்க்கறாங்க... ஏன் இந்த ஓரவஞ்சனை?
- அவதிப்படும் அண்ணன்மார்கள் சங்கம்
- அனார்கலி, தஞ்சாவூர்.

என்னதான் ஒருத்தர் மத்தவங்களைவிட ‘ஒரு’ படி கூடுதலா ‘ஆறு’தல் சொன்னாலும், அதையும்

‘ஆறுதல்’னுதான் சொல்ல முடியும். ‘ஏழுதல்’னு சொல்ல முடியாது.

- அணைத்து அணைத்து ஆறுதல் சொல்வோர் சங்கம்
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.