தேங்காய் சீனிவாசன் ஆகும் பிரகாஷ்ராஜ்...





‘பில்லா 2’வுக்கு ஜார்ஜியா நாட்டிலும் புரட்யூசர்ஸ் இருக்காங்க. பட ரிலீசுக்கு சென்னை வந்திருந்த அவங்க, ‘பில்லா 2’ முதல் ஷோவில ரசிகர்களோட ஆரவாரத்தை ஷூட் பண்ணிட்டுப் போயிருக்காங்க. ஜார்ஜியா ரிலீஸ் புரமோஷனுக்காம்.

‘பில்லா’வை அடுத்து ஜார்ஜியா போயிருக்க செல்வராகவனோட ‘இரண்டாம் உலகம்’ யூனிட், காட்டுக்குள்ளேயே தங்கறதுக்கு பாத்ரூமோட முகாம் அமைச்சிருக்காங்களாம். ஆனா பாத்ரூம் வசதி வி.ஐ.பிக்களுக்கு மட்டும்தான்னு ஒரு நியூஸ். மத்தவங்களுக்கு காடு ஃப்ரீ...

ஷங்கரோட விக்ரம் மீண்டும் கைகோர்க்கிற ‘ஐ’ ஷூட்டிங் சென்னையில ஸ்டார்ட் ஆகிடுச்சு. இந்தப் படக் கதையில ‘பீரியட்’ எபிஸோடும் இருக்காம். ஐ..!



‘தில்லுமுல்லு’ ரீமேக் வேலைகள் ஆரம்பமாயிடுச்சு. புது ‘தில்லு முல்லு’வில ரஜினி வேடம் ஏற்கப் போறது ‘தமிழ்ப்படம்’ ஷிவா. தேங்காய் சீனிவாசன் வேடத்துக்கு பிரகாஷ்ராஜையும், சௌகார் ஜானகி வேடத்துக்கு கோவை சரளாவையும் ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்களாம்..!

கௌதம் மேனனோட ‘நீதானே என் பொன்
வசந்தம்’ படத்துக்காக இளையராஜா இசைல யுவன் ஒரு பாடல் பாடியிருக்கார். ‘சாய்ந்து சாய்ந்து’ன்னு ஆரம்பிக்கிற அந்தப் பாடல்தான் சமீபத்திய யுவனோட ஃபேவரிட் ஆகியிருக்கு.
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஒரு விளம்பரப் படத்தை டைரக்ட பண்ணி
யிருக்கார். பிரகாஷ்ராஜ் - மீனா நடிக்க, ப்ரியன் ஒளிப்பதிவு செய்ய, சத்யா இசைல வைரமுத்து பாடல் எழுதி விளம்பரத்துக்கே விளம்
பரமாகியிருக்கு.

ஷக்தி சிதம்பரம் நடிகராகி டைரக்ட் பண்ற ‘மச்சான்’ல கருணாஸ் ஹீரோவானாலும், பாடல்களை ஹாங்காங், பாங்காக், மலேசியா, புக்கட்னு பறந்து பறந்து படம்பிடிக்கப் போறாங்க. ஹீரோயின் ‘ஷெரில் பிண்டோ’ங்கிறதால இந்த ஆஃபரோ..?



அதுல் குல்கர்னி டிடெக்டிவ்வா நடிக்கிற ‘சுழல்’ படத்துக்கு எல்.வைத்தியநாத
னே ட மகன் எல்.வி.கணேசன்தான் இசை. படத்துல எலெக்ட்ரானிக் இசை தவிர்த்து, லைவ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் வச்சே இசைச்சிருக்காராம் அவர். கிரேட் கணேசன்..!

‘நாங்க’ல வில்லனான, பாடகர் மனோவோட மகன் ஷாகீர் ‘தேடினேன்’ படம் மூலமா ஹீரோவா ஆகறார். அவரோட தேடல் ரெண்டாவது படத்திலதான் நிறைவேறியிருக்கு போல. 
- கோலிவுட் கோயிந்து

சைலன்ஸ்


விரல் வித்தை ஹீரோவுக்காகக் காத்திருந்து ‘சென்னை’ப் படம் எடுக்க முடியாமப் போன ‘கள’ டைரக்டர், அடுத்தும் ‘கொலவெறி’ ஹீரோவையே வச்சு ஹேட்ரிக் அடிப்பார்னு நியூஸ் வந்துக்கிட்டிருந்தது. அதுக்கான லைனை டைரக்டர் சொன்னப்ப, ‘‘இதெல்லாம் வேண்டாம். வேற லைனைப் புடிங்க...’’ன்னுட்டாராம் ஹீரோ. இப்ப என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டிருக்காராம் ‘சக்சஸ்’. பாவம், டைரக்டர்ஸ்..!

படக் கம்பெனிகளுக்கு ஒத்துழைப்பு தர்றதுல மூணுஷாவை அடிச்சுக்க முடியாது. ஆனா சமீபத்துல அவர் ஜீவ ஜோடியா நடிக்க ஒத்துக்கிட்டிருக்க படக் கம்பெனி, அசிஸ்டன்ட் பேட்டா சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல கொஞ்சம் கறாரா நடந்துக்கவே, மூணுஷாவே முகம் சுளிச்சுடுச்சாம். ஏம்ப்பா ஏஞ்சல்ஸை வூண்ட் பண்றீங்க..?