தத்துவம் மச்சி தத்துவம்





‘‘என்ன இது... சாப்பாடு செய்யாம நிறைய அண்டாக்கள்ல தண்ணி மட்டும் நிரப்பி வச்சிருக்கீங்க..?’’
‘‘மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கை நனைக்க வர்றோம்னு சொன்னாங்க..!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

‘‘தலைவர் எதுக்கு கையிலே மூணு ஃபுல் பாட்டில் சரக்கோடு
ஆபீசுக்குப் போறார்..?’’
‘‘தினமும் மூணு லிட்டர் தண்ணி சாப்பிடறது உடம்புக்கு நல்லதுன்னு டாக்டர் சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டார்!’’
- எஸ்.கோபாலன், சென்னை-61.

பெயர் வேண்டுமானால் ‘வான்’கோழியாக இருக்கலாம்; ஆனால் அது தரையில்தான் நடந்தாகணும்.
- குவாட்டரும் பிரியாணியும் கலந்து அடித்து அந்தரத்தில் மிதப்போர் சங்கம்
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

‘‘தலைவர் ஏன் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போறதா அறிவிச்சு இருக்கார்..?’’
‘‘தேர்தல் நியாயமா நடைபெறும்னு சொல்லிட்டாங்களே..!’’
- சிக்ஸ்முகம், கள்ளியம்புதூர்.

கடலை எண்ணெய் தயாரிக்க கடலை இருந்தா போதும்... விளக்கெண்ணெய் தயாரிக்க விளக்கு இருந்தா போதுமா?
- எண்ணெய் தேய்த்துவிட்டு குளிக்காமல் சிந்திப்போர் சங்கம்
- ஏ.ஸ்ரீதர், மதுரை.

என்னதான் சிறந்த கதா‘பாத்திரமா’ இருந்தாலும், அவசரத்துக்கு அவரை அடமானம் வைக்க முடியாது...
- பாத்திரமறிந்து தத்துவங்களைப் பரிமாறுவோர் சங்கம்
- நா.கி.பிரசாத், கோவை.

‘‘புலவரை ஏன் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்கிறீர்கள் மன்னா..?’’
‘‘அவரும் பாட்டுப் பாடி நம்மை சாகடிக்கிறாரே..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.