நியூஸ் வே

அதிரடிக் கருத்துகளால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங். இம்முறை அவரது அதிரடி, ‘‘பையன் தப்பு செய்தால், அவனுடைய அப்பாவை தண்டிக்க வேண்டும்’’ என்பது! ‘‘ஒரு பையன் திருடுகிறான், கொள்ளை அடிக்கிறான், பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறான் என்றால், அதற்கெல்லாம் அவன் காரணம் இல்லை; தப்பு செய்தது அவன் தந்தைதான். தந்தையின் ரத்தம், மரபணு, கேரக்டர் அவனுக்குள் இருக்கிறது. அவன் குற்றமற்றவன்; அப்பாதான் குற்றவாளி’’ என்பது அவரின் ஸ்டேட்மென்ட். வழக்கம்போல கண்டனக் கணைகள் பறக்கின்றன!
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், தனது பாதுகாப்புக்கான கமாண்டோ படையை முழுவதும் பெண்கள் படையாக மாற்றப் போவதாக அறிவித்திருக்கிறார். முதல்கட்டமாக அவரது அலுவலகத்தில் 20 பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ‘‘பெண்கள் சக்திவாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவே இப்படிச் செய்கிறேன்’’ என்கிறார் பாதல். ஆனால், ‘‘கொல்லப்பட்ட லிபியா சர்வாதிகாரி கடாபிக்கு அடுத்து பெண் பாதுகாவலர்களை வைத்திருக்கும் ஒரே தலைவர் பாதல்’’ என எதிர்க்கட்சியினர் சொல்ல... அவர்கள் பாராட்டுகிறார்களா, திட்டுகிறார்களா என புரியாமல் குழம்புகிறார் பாதல்.
உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த வேகத்தோடு நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தயாராகி வருகிறது சமாஜ்வாடி கட்சி. கடந்த முறை ரேபரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தாமல், அவர் சுலபமாக ஜெயிக்க வழிசெய்தது இந்தக் கட்சி. இம்முறை சோனியாவை மட்டுமல்ல, ராகுல் காந்தியை எதிர்த்தும் வேட்பாளரை நிறுத்த மாட்டார்களாம். பதிலுக்கு முலாயம் சிங்கை எதிர்த்தும், அவரது மருமகளும் உ.பி. முதல்வர் அகிலேஷின் மனைவியுமான டிம்பிளை எதிர்த்தும் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தாதாம்!

ஓவியங்கள் வரைவதை நிறுத்திவிட்டு, இப்போது போட்டோகிராபராக மாறிவிட்டார் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி. அரசின் வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிடப் போகும்போது கையோடு கேமரா கொண்டு செல்கிறார். பணிகளை படம் எடுப்பவர், அப்படியே இயற்கைக் காட்சிகளையும் படம் பிடிக்கிறார். மம்தா எடுத்த பல படங்கள் பத்திரிகைகளிலும் வந்திருக்கின்றன. ‘‘முதல்வர் வேலையைத்தான் செய்யலை; இதையாவது செய்யறாரே’’ என கிண்டலடிக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி.
|