‘‘2016-ல் ஆட்சி அமைப்போம்னு சொல்லிட்டு, இப்படி திடீர்னு ஆசிரமம் ஆரம்பிச்சிட்டீங்களே... ஏன் தலைவரே?’’
‘‘அதுவரைக்கும் என்ன பண்றதுன்னே தெரியலைய்யா. அதான்...’’
- சிக்ஸ்முகம், கள்ளியம்புதூர்.
‘‘நம்ம கபாலி தொலைநோக்குப் பார்வையோட இருக்கான்...’’
‘‘எப்படிச் சொல்றீங்க ஏட்டய்யா..?’’
‘‘அவன் சொந்த செலவிலயே, போலீஸ் தேர்வு எழுதுறவங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு ஏற்பாடு செஞ்சிருக்கானே!’’
- கு.அருணாசலம், தென்காசி.
காட்டு விலங்கை வேட்டையாடலாம்; ஏன், வீட்டு விலங்கையும் வேட்டையாடலாம்... ஆனா, கைதியோட கைவிலங்கை வேட்டையாட முடியுமா?
- வீட்டுச் சிறையில்
வாடுவோர் சங்கம்
- ஏ.ஸ்ரீதர், மதுரை.
‘‘தலைவர் ஏன் மகளிரணித் தலைவியை உரசிக்கிட்டே நிக்கறாரு?’’
‘‘‘டச்’ விட்டுப் போகக் கூடாதாம்..!’’
- அம்பை தேவா,
சேரன்மகாதேவி.
‘‘குற்றப் பத்திரிகையைப் படிச்சுட்டு தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்..?’’
‘‘முதலில் வருபவர்களுக்கு ஜெயிலில் முன்னுரிமை வழங்கப்
படும்னு எழுதியிருந்ததாம்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.
‘‘குற்றப் பத்திரிகையைப் படிச்சுட்டு தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்..?’’
‘‘முதலில் வருபவர்களுக்கு ஜெயிலில் முன்னுரிமை வழங்கப்
படும்னு எழுதியிருந்ததாம்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.
மனுஷனோட சட்டையில பாக்கெட் இருக்கும்; ஆனா பாம்போட சட்டையில பாக்கெட் இருக்குமா?
- அவசியமில்லாததை பாம்புகள் வைத்துக் கொள்வதில்லை என்பதை உணர்ந்தோர் சங்கம்
- ஜே.தனலட்சுமி, கோவை.