ராஜமௌலி டைரக்ஷன்ல தல?





இப்ப தென்னகக் கம்பெனிகள், ஹீரோக்கள் எல்லாரோட கவனமும் எஸ்.எஸ்.ராஜமௌலி மேலதான். அவர் டைரக்ஷன்ல தமிழ்ல அஜித், தெலுங்கில பிரபாஸை வச்சு படம் தயாரிக்க முயற்சிகள் போய்க்கிட்டிருக்காம். ‘விஸ்வாமித்ரன்’ங்கிறது டைட்டிலா இருக்கலாம்.

சூர்யாவை வச்சு கௌதம் மேனன் டைரக்ட் பண்ணவிருக்க படம் பீரியட் ஃபிலிமாம். ஆனா வழக்கமான பீரியட் படங்களைப் போல் மெதுவா நகராம, நவீன படங்களைப் போலவே ஃபாஸ்ட் மேக்கிங்ல இருக்குமாம். இருக்கணுமே..?



கே.பாலசந்தர் டைரக்ட் பண்ணி கமல் - ரஜினி நடிச்சு, 79ல வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’, நவீன மெருகூட்டலோட தியேட்டர்களுக்கு வரவிருக்கு. அதுக்கான சினிமாஸ்கோப், டால்பி டிஜிட்டல் சவுண்ட் வேலைகள் நடந்துக் கிட்டிருக்கு. நி.இனிக்குது...

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்துல ஆடட் அட்ராக்ஷனா ஒரு பாடலை ஆன்ட்ரியாவைப் பாட வச்சு ரெகார்ட் பண்ணியிருக்காங்க. கமலோட நடிக்கப் போனாலும் போச்சு, நடுவுல ஆன்ட்ரியா சத்தத்தையே காணோம்.

ஜீவா நடிச்சிருக்க ‘முகமூடி’யோட அடுத்த பாகத்தையும் சீக்கிரமே ஆரம்பிக்கவிருக்க மிஷ்கின், அதை நியூயார்க்ல எடுக்க திட்டம் வச்சிருக்கார். அந்த பார்ட்ல வில்லனா அவரே நடிக்கவும் போறாராம். அதே ‘யு டி.வி.’ தயாரிக்க ரெடியா..?

‘குறும்புக்காரப் பசங்க’ டைரக்டர் டி.சாமிதுரை ஒரு மாற்றுத்திறனாளி. அவரோட திறமையை மதிச்சு, தான் கேரளாவில நடிச்சுக்கிட்டிருந்த ‘916’ படத்துல பிரேக் கேட்டு, இந்தப் பட ஆடியோ ரிலீஸ்ல கலந்துக்கிச்சு ஹீரோயின் மோனிகா. சொக்கத்தங்கம்..!

ராம நாராயணன் தயாரிக்கவிருக்க ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ல சந்தானம், பவர் ஸ்டாரோட, பிரேம்ஜியும் இருக்கார். இது ஏற்கனவே வெளிவந்த கே.பாக்யராஜோட ‘இன்று போய் நாளை வா’வோட ரீமேக்காம். கேட்டாலே சிரிப்பு வருதே..?



‘பாண்டி ஒலிபெருக்கி நிலையத்’துல காதலைக் கையிலெடுத்துக்கிட்டு வர்ற டைரக்டர் ராசு மதுரவன், சபரீசன் - சுனேனாவை படத்துல காதலிக்க விட்டாலும், தம்பி ராமையா மூலமா சென்டிமென்ட்டையும் கலந்திருக்காராம். அதானே...

‘மேல்நாட்டு மருமகள்’லேர்ந்து இங்கே வந்துக்கிட்டிருக்க ஆங்கிலேய நடிகைகள் லிஸ்ட்ல ஷான் டைரக்ட் பண்ற ‘காதலே என்னை காதலி’ லினாராவையும் சேர்க்கலாம். படத்துல இந்திய கலாசாரத்துக்காக உயிரைப் பணயம் வைக்குதாம் லினாரா. புல்லரிக்குதுங்க..!
- கோலிவுட் கோயிந்து

சைலன்ஸ்

கொஞ்சம் வெற்றியைப் பார்த்தாலே தலைக்கு போதையேறிடுறது சினிமா பிஹேவியர். இங்கே போதைக்கு நேரடி அர்த்தத்தையே எடுத்துக்கலாம். சமீபத்துல இரண்டாம் நிலை ஹீரோக்கள்ல சுமாரான வெற்றியடைஞ்ச மூணெழுத்து ‘வி’ ஹீரோ, கொஞ்ச காலமா பொது இடங்கள்லயும் கன்னமெல்லாம் வீங்கியே சுத்திக்கிட்டிருந்தார். ரெண்டு படம் ஊத்திக்கவே, இப்ப ஊத்திக்கிறதைக் குறைச்சு ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட்ல நடிக்க தன்னைத் தேத்திக்கிட்டிருக்காராம். பாத்து... பசங்களா..!

கோலிவுட்ல பெரிய ஹீரோக்களிடத்துல இப்ப கதைப்பஞ்சம் தலை விரிச்சாடுது. சமீபத்துல வெளியான பல ஹீரோக்களோட படங்கள் வெற்றியடையாததால, இப்ப எல்லாருமே நல்ல கதையை வலைவீசித் தேடிக்கிட்டு இருக்காங்களாம். ‘‘கதைல இவங்க தலையீடு இல்லாம இருந்தாலே படம் தப்பிச்சுக்குமே..?’’ங்கிறார் அப்படி கதை சொல்லி, ஃபெயிலாகி வந்த டைரடக்கர் ஒருத்தர். நல்லா சொன்னீங்க..!