அல்பம் அலமேலு

‘‘காலையில கொடுத்த பால் கெட்டுப் போச்சுன்னு பொய் சொல்லி, வேற பாக்கெட் வாங்கற அல்ப வேலையை இதோட நிறுத்திக்குங்க...’’
‘‘நேத்து ஃபிளைட் லேட்டாயிடுச்சு... முந்தாநாள் சீக்கிரமே ஏர்போர்ட் போயிட்டேன்னு அலமேலு சொல்றதைக் கேட்டு டென்ஷன் ஆகாதே! தெரிஞ்சவங்க யாரையாச்சும் ரிசீவ் பண்ணப் போயிருப்பா... அவளே ஃபிளைட்ல போனது மாதிரி பீலா விடுறா...’’
‘‘ஏங்க... இந்த நகைக்கடை முன்னாடி போய் நிறுத்துங்க! பின்னாடி வண்டியில வர்ற பக்கத்து வீட்டு மாமி பார்த்துட்டு வயிறெரியட்டும்!’’
‘‘இது சுருக்குப்பை இல்லீங்க... நம்ம பையனோட பழைய சாக்ஸ்! பணத்தை இதுல வச்சு இடுப்புல சொருகிகிட்டா சேஃப்டி... இதான் லேட்டஸ்ட் ஃபேஷன்னு சொன்னா, எல்லாரும் நம்பிடுவாங்க!’’
‘‘பழைய சாதத்தையும் இட்லியையும் எனக்குப் போட்டுட்டு, ‘எங்க மாமியார் பீட்ஸா, பர்கர்தான் சாப்பிடுவாங்க’ன்னு உன் பொண்டாட்டி ஊர் பூரா கதை விடறாடா!’’
‘‘பாருடா உங்கம்மாவை! அயனாவரத்துல இருக்கற அத்தைகூட போன்ல பேசிக்கிட்டிருக்கேன். அமெரிக்கா அண்ணன்கிட்ட நான் பேசறதா உங்கம்மா பந்தா பண்றா...’’
|