ரீடர்ஸ் பேட்டை 3



சற்றே பெரிய தத்துவம்!

அழகி ஒருத்தி ஆற்றில் அடித்துச் செல்லப்படும்போது...‘நமக்கென்ன’ என்று பாராமல் இருப்பவன் மனித மிருகம்;‘ஆபத்து... ஆபத்து...’ என்று அலறுபவன் பொதுஜனம்; ‘ஐயோ பாவம்’ என்று முணுமுணுப்பவன் அனுதாபி; ‘ஆண்டவனே, அவளைக் காப்பாற்று’ என்பவன் பக்தன்; ‘அற்புதமான அழகு’ என்று அந்த நிலையிலும் ரசிப்பவன் கவிஞன்;‘பெண்களும் நீச்சல் கற்க வேண்டும்’ என்பவன் சீர்திருத்தவாதி; ‘ஆற்றில் குளிக்கக்கூடப் பாதுகாப்பில்லை’ என்பவன் எதிர்க்கட்சிக்காரன்; ‘எவ்வளவு இழப்பீடு வழங்கலாம்’ என யோசிப்பவன் ஆளுங்கட்சிக்காரன்; காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறப்பவன் தியாகி;ஆற்றில் இறங்கிக் காப்பாற்றி, தன்வழியே செல்பவன் கர்மயோகி.

- சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.

காதலிப்பதாய் சொன்னேன்...வயசுக்கோளாறு என்றார்கள். உன்னைக்காதலிப்பதாய்சொன்னேன்...பார்வைக்கோளாறுஎன்றார்கள்.

-பெ.பாண்டியன்,காரைக்குடி.