இச் இச்சை!



‘தலைவரை கோட்டையில உட்கார வைத்தே தீருவோம்’னு ரசிகர்கள் நினைச்சிட்டு இருக்கிற வேளையில, தீர்மானம்னு என்னென்னத்தையோ பேசிட்டிருக்காரே? பொழைக்கத் தெரியாத ஆளுய்யா ரஜினி!
 லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

‘கடலுக்குள் மூழ்கப் போகிறதா தமிழகம்’ படித்தோம். இயற்கை ஒருபக்கம் அழித்தாலும் இன்னொரு பக்கம் சமன்செய்துவிடும். ரிஷிகளும் தீர்க்கதரிசிகளும் வாழ்ந்த தென்னிந்தியப் பகுதி இயற்கையின் எல்லா விளையாட்டுக்களையும் எதிர்கொண்டு நிற்கும் என நம்பலாம். வீண் அச்சம் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
மு.செல்வராஜ், கும்பகோணம்.

வாசகர் கவிதைகள் ஒவ்வொரு வாரமும் அசத்துகின்றன. கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் விதமும் வடிவமைப்பும் உள்ளபடியே கிரேட் சார்!
ஏ.ஜி.கல்யாணசுந்தரம், கோயம்புத்தூர் 6.

ஊசி, பாசிமணி விற்றுக்கொண்டிருந்த ஞானசுந்தரி இன்று சூழலுக்கு உகந்த நகைகள் செய்து விற்பதும், அதை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதும் நல்ல முன்னேற்றம்.
எம்.ஜி.பரத், திண்டுக்கல்.

கமலே தப்பித்தவறி முத்தத்தை மறந்தாலும் நீங்க மறக்க மாட்டீங்க போலிருக்கே... அவரைப் போலவே உமக்கும் இச் மீது இச்சை அதிகமோ?
ஏ.எஸ்.எம்.ஜோசப், சென்னை 21.

கவர்ச்சி காலண்டர் கன்னியரின் அதிரடி போஸ் உலகைக் கலக்கிய செய்தியை வெளியிட்ட நீர், கூடவே அதுல ஒரு காலண்டரும் கிடைக்கும்படி செய்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்போம்!
 எம்.சம்பத்,வேலாயுதம்பாளையம்.

‘எண்ணம் போலத்தான் வாழ்க்கை’ என உணர்த்தியது கடைசிப் பக்க கதை. நாற்பதைக் கடந்த தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சேதி.
எம்.கே.அருள்ராஜா, முனியங்குறிச்சி.

‘கேள்வி பதில்’ பகுதி குங்குமத்தை மினி என்சைக்ளோபீடியாவாக மாற்றியிருக்கிறது. தேவைப்படும் தகவல்களுக்கு நாங்கள் தேடும் நபர் நீங்கள்தான்.!
 சந்திரா, நாகப்பட்டினம்.

குட்டிக் குட்டித் தகவல்களாக இருந்தாலும் நிறைய விஷயங்களை நீர் முந்திக் கொண்டு தந்துவிடுகிற பகுதியாக விளங்குகிறது நியூஸ் வே பகுதி. ஜமாய்ங்க!
 அ.முரளிதரன், மதுரை 3.

அட, கவுண்டர் கொடுத்தேதான் ‘கவுண்ட’மணி ஆனாரா? பெயர்க் காரணம் சூப்பரப்பு. தகவலுக்கும் தேங்க்ஸ் அப்பு.
ம.மல்லிகை மன்னன், கொள்ளிடம்.

காதல் சரண்யா வீட்டைவிட்டு ஓடிப் போயிட்டாரா? அப்ப, இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு அவர் கல்யாணம் முடிச்சிட்ட சேதியை எதிர்பார்க்கலாமா?
 திருமலைராஜன், தேனி.

ஏற்கனவே டிக்கெட் கிடைக்க மாட்டேங்குது. இப்ப கரப்பான் பூச்சி, எலி கூடவெல்லாம் பயணிக்கணும்னு சொல்றீங்க. ரயில் பயணம்னாலே இனி யோசிக்கணும்.
வசந்தி மனோகரன், கானாடுகாத்தான்.