செயற்கைக் கருத்தரிப்பு





“No test tube can breed love and affection. No frozen packet of semen ever read a story to a sleepy child.”  Shirley Williams, British politician - academic

செயற்கைக் கருத்தரிப்பு என்பது இயற்கையாக ஆண் பெண்ணிடையே நிகழும் கலவியின் மூலம் அல்லாமல், மருத்துவ முயற்சிகள் மூலம் கர்ப்பமுறுதல் ஆகும். ஆய்வுக்கூடக் கருவுறல் (In Vitro Fertilisation IVF), செயற்கை முறை உயிரணு புகுத்தல் (Artificial Insemination) ஆகியன பிரதானமாகப் பின்பற்றப்படும் முறைகள்.
மிக்ஷிதில் ஆணின் உயிரணு, பெண்ணின் கருமுட்டை - இரண்டையும் வெளியே எடுத்து பரிசோதனைக்கூடத்தில் கரு உண்டாக்கி, வளர்ந்த பின் மீண்டும் பெண்ணின் கருப்பையிலேயே வைத்து வளர விடுவார்கள். இப்படி உருவாகும் குழந்தையை ‘சோதனைக்குழாய் குழந்தை’ (Test Tube Baby) என்பர். Artificial   Inseminationல் ஆணின் உயிரணு மட்டும் வெளியே எடுக்கப்பட்டு, பெண்ணின் கருப்பைப் பாதையில் செலுத்தப்படும். கருமுட்டையுடன் இது இணைந்து கருவை உண்டாக்கும்.

சில சமயம் உயிரணு, கருமுட்டை அல்லது கரு, தானம் பெற்றதாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் கரு சுமக்கும் பெண்ணே வேறொருவராக இருப்பார். இவர் வாடகைத் தாய் Surrogate   Mother). மேலைநாடுகளில் உயிரணு தானம் செய்பவர்கள் (Sperm Donors), உயிரணு வங்கிகள் (Sperm Banks) பிரபலம். இந்தியாவில் வாடகைத் தாய்கள் அதிகம்.
15ம் நூற்றாண்டில் கேஸில் ராஜ்ஜியத்தை ஆண்ட 4ம் ஹென்றி மன்னனால் தன் மனைவி ஜுவானவைக் கர்ப்பமுற வைக்க முடியாததால், அவளுக்கு செயற்கை முறையில் உயிரணு புகுத்தும் முறை முயற்சிக்கப்பட்டதாகக் குறிப்புகள் உண்டு. ‘கருமுட்டையும் உயிரணுவும் இணைவதால்தான் கரு உண்டாகிறது’ என 1779ல் இத்தாலிய மருத்துவர் லாஸாரோ ஸ்பல்லஸானி கண்டுபிடித்தார். தவளை, மீன், நாய் போன்றவற்றுக்கு செயற்கை முறையில் உயிரணு புகுத்தி அவர் வெற்றி கண்டார். 1790ல் ஸ்காட்லாந்து அறுவை நிபுணர் ஜான் ஹன்டர், ஒரு துணி வியாபாரியின் மனைவிக்கு உயிரணுவைச் செலுத்தி கரு உண்டாக்கினார். 1855ல் நியூயார்க்கில் மருத்துவர் மரியான் சிம்ஸ், இரு வருடங்களில் 55 முறை ஓர் ஆணின் உயிரணுவை அவரது மனைவியின் கருப்பையில் செலுத்திப் பார்த்ததில் ஒரே ஒரு முறை அப்பெண் கருத்தரித்தார். அதுவும் கருச்சிதைவில் முடிந்தது.



1884ல் ஃபிலடெல்ஃபியாவைச் சேர்ந்த மருத்துவர் வில்லியம் பேன்கோஸ்ட், தம் மாணவர்களிலேயே அழகானவனைத் தேர்ந்தெடுத்து, அவனிடம் பெறப்பட்ட உயிரணுவை, குழந்தைப் பேறின்மை சிகிச்சைக்கென வந்த ஒரு பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து உள்ளே செலுத்தினார். அடுத்த ஒன்பதாவது மாதம் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். இதுதான் தானம் பெற்ற உயிரணுவைக் கொண்டு உருவான முதல் வெற்றிகரமான குழந்தை. ஆனால் இந்த விஷயம் ரகசியமாக வைக்கப்பட்டது. 25 வருடங்கள் கழித்து ஒரு பத்திரிகையில் இந்த விஷயம் வெளியானது. பேன்கோஸ்ட் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். கத்தோலிக்க தேவாலயம் அனைத்து வகை செயற்கைமுறை உயிரணு புகுத்தல்களையும் ஒட்டுமொத்தமாகத் தடை செய்தது.

1906ல் ராபர்ட் டமோரிஸ், ஒரு மலட்டுப் பெண்ணுக்கு சினைப்பை மாற்று அறுவை சிகிச்சையை முயன்றார். அதன் காரணமாக அப்பெண் கருவுற்றார். அதுதான் அவ்வகையிலான முதல் மற்றும் ஒரே முயற்சி. 1934ல் ஹார்வார்ட் விஞ்ஞானி க்ரெகரி பின்கஸ், முயல்களில் மிக்ஷிதி பரிசோதனை நிகழ்த்தி, இதை மனிதரிடையே முயற்சிக்கலாம் என்றார். அது விமர்சிக்கப்பட்டது. 1944ல் ஜான் ராக்கும் மென்கினும் 800 கருமுட்டைகளை சேகரித்து, அவற்றில் 138ஐ கருத்தரிக்க வைக்க முயற்சித்தனர். அனைத்தும் தோல்வியுற்றன. பின் மென்கின் கருமுட்டையும் விந்தணுவும் சேர்ந்திருக்கும் நேரத்தை அதிகரித்து மீண்டும் முயற்சித்தார். இம்முறை 4 கருமுட்டைகள் கருவுண்டாயின. இதுதான் முதல் வெற்றிகரமான மிக்ஷிதி முயற்சி. ஆனால் இப்படி உண்டாக்கிய கருக்களை பெண்களுக்குள் பதிக்க முயலவில்லை.

1949ல் போப் 12ம் பயஸ், ‘உடலுக்கு வெளியே கரு உண்டாக்கும் முறைகளை’க் கண்டித்தார். ‘‘இவர்கள் கடவுளின் வேலையை எடுத்துக் கொள்கிறார்கள்’’ என்றார்.
நாஜி ஜெர்மனியில் யூதர்கள், ஜிப்ஸிக்கள், வதை முகாம்களில் இருந்தவர்கள் ஆகியோரிடையே செயற்கைமுறை உயிரணு செலுத்தல் சோதனை நிகழ்த்தினார்கள். 1949ல் உயிரணுவை உறையச் செய்யவும், மீண்டும் வெதுவெதுப்பாக்கவும் புதிய முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1953ல் ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ்டன் கல்லூரியில் முதல் முறையாக உறைய வைத்த உயிரணுவைச் செலுத்தி செயற்கைக் கருவுறலை வெற்றிகரமாகச் செய்தனர். 1954ல் அமெரிக்காவின் இல்லினாயிஸ் நீதிமன்றம், ‘செயற்கைக் கருவூட்டல் சட்டபூர்வமானது’ என அறிவித்தது.

லேன்ட்ரம் ஷெட்டில்ஸ் என்ற நியூயார்க் மருத்துவர் 1962ல் முட்டையிலிருந்து கரு உண்டாக்கி, அதை ஒரு பெண்ணின் கருப்பைக்குள் வைத்து அவளைக் கர்ப்பமுறச் செய்ததாகச் சொன்னார். அது உண்மையாக இருப்பின் ஒரு மைல்கல் சம்பவமாக இருந்திருக்கும். ஆதாரங்களை அவர் காட்டவில்லை. டோரிஸ் டெல்ஸியோ என்ற பெண்ணுக்கு ஃபெல்லோபியன் குழாய்களில் அடைப்பு இருந்ததால் கர்ப்பமுற முடியாமல் போனது. 1973ல் டாக்டர் வில்லியம் ஸ்வீனி என்பவர், அவரது உடலிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் கருமுட்டைகளை வெளியே எடுத்து கொலம்பியாவிலிருக்கும் ப்ரெஸ்பைடீரியன் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். டோரிஸின் கணவரின் உயிரணுவைப் பெற்று, அதனை கருமுட்டை இருந்த சோதனைக்குழாய்களில் கலந்து இன்குபேட்டரில் வைத்தனர் அங்கிருந்த டாக்டர்கள். ஆனால் மருத்துவமனை நிர்வாகி இதை எதிர்த்ததால், இந்த முயற்சி தகர்ந்தது. இதனால் கோபமான டோரிஸ், மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்து 50,003 டாலர் நஷ்ட ஈடு பெற்றார்.

1968ல் போப் ஆறாம் பால், பிuனீணீஸீணீமீ க்ஷிவீtணீமீ கடிதத்தை தேவாலயங்களுக்கு அனுப்பினார். உடலுக்கு வெளியே கரு உண்டாக்கும் முறைகளை அது தடை செய்தது. 1969ல் அமெரிக்கர்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் கணிசமானோர், ‘மிக்ஷிதி கடவுளின் விருப்பத்திற்கு எதிரானது’ எனக் கருத்து தெரிவித்திருந்தனர்.
பல ஆண்டு கருவூட்டல் பரிசோதனைகளில் தோல்வியைத் தழுவிய பிரிட்டிஷ் மருத்துவர் ராபர்ட் எட்வர்ட்ஸ், 1968ல் பேட்ரிக் ஸ்டெப்டோ என்ற மகப்பேறு மருத்துவரை சந்தித்தார். லேப்ராஸ்கோப்பி மூலம் கருமுட்டையை பெண் உடலிலிருந்து வெளியே எடுக்கும் அறுவை முறையைக் கண்டுபிடித்திருந்தார் ஸ்டெப்டோ. எட்வர்ட்ஸும் ஸ்டெப்டோவும் இணைந்து, முட்டைகளை சோதனைக்கூடத்தில் கருவூட்டும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 1975ல் ஒரு பெண்ணிடம் முதன்முதலாக மிக்ஷிதிஐ முயற்சித்தனர். கருப்பைக்கு பதில் ஃபெல்லோபியன் குழாய்களில் அது பதிக்கப் பட்டதால் கரு சிதைந்தது. 1976ல் மீண்டுமொரு பெண்ணுக்கும் இதே நடந்தது.

அதே ஆண்டு 29 வயதுப் பெண் லெஸ்லி ப்ரௌன் தன் கணவர் ஜானுடன் ஸ்டெப்டோவிடம் குழந்தைப்பேறின்மை சிகிச்சைக்கு வந்தார். 1977ல் அறுவைசிகிச்சை மூலம் லெஸ்லியின் கருமுட்டை வெளியே எடுக்கப்பட்டது. இரண்டு நாட்களில் அவரது கருமுட்டை கருவூட்டப்பட்டு, மீண்டும் கருப்பையில் பதிக்கப்பட்டது. லெஸ்லி கர்ப்பமானார். 1978ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி... லூயி ஜாய் ப்ரௌன் என்ற உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை சிசேரியனில் பிறந்தாள். அந்த முழுப் பிரசவ நிகழ்வும் அரசாங்கக் குழுவினரால் வீடியோ செய்யப்பட்டது. புகழின் உச்சிக்கு ஏறிய ப்ரௌன் தம்பதியர் தங்களின் கதையை ஒரு பிரிட்டிஷ் பத்திரிகைக்கு ஐந்து லட்சம் டாலர்களுக்கு விற்றதாக சொல்லப்பட்டது.

1978ல் கொல்கத்தாவைச் சேர்ந்த சுபாஷ் முகோபாத்யாய் என்ற அவ்வளவாக பிரபலமில்லாத இந்திய மருத்துவர், தம் பழைய உபகரணங்களையும், வீட்டில் பயன்படுத்தும் ஒரு ஃப்ரிட்ஜையும் வைத்துக் கொண்டு சோதனைக் குழாய் குழந்தை ஒன்றை உருவாக்கியதாகத் தெரிகிறது. அதன் மூலம் துர்கா (எ) கனுப்ரியா அகர்வால் என்ற குழந்தை 1978 அக்டோபர் 3ம் தேதி பிறந்தது. ஆனால் அரசு அதிகாரிகள் அவரது கண்டுபிடிப்பை உலக அரங்கில் கொண்டு செல்ல விடாமல் தடுத்து விட்டார்கள். இதனால் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

1999ல் நடாலி ப்ரௌன் (லூயி ப்ரௌனின் சகோதரி) சோதனைக்குழாய்க் குழந்தைகளுள் முதன்முதலாக இயற்கையாகக் கருத்தரித்துத் தாயானார்.
2000களில் மிக்ஷிதி உலகெங்கும் சகஜமாகி விட்டது. இன்னமும் அது காஸ்ட்லியான சமாசாரமாகவே இருந்து வருகிறது. 2010ல் சோதனைக் குழாய்க் குழந்தைக்காக ராபர்ட் எட்வர்ட்ஸுக்கு மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒப்பீட்டளவில் உயிரணு தானம் மூலம் குழந்தை பெறுவது குறைவாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த தம்பதி, ‘செயற்கை உயிரணு செலுத்தத்திற்கு ஐஐடி மாணவரின் உயிரணு தேவை’ என விளம்பரம் தந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது.
கருவினை உருவாக்கியதில் மருத்துவர்கள் கடவுளுக்கு அருகே சென்றுவிட்டனர்.         

Stats சவீதா

27% மிக்ஷிதி முயற்சிகள் வெற்றிகரமான குழந்தையாக வெளி வருகின்றன.
86% செயற்கை முறை உயிரணு செலுத்தல் முயற்சிகள் வெற்றி பெறுகின்றன.
இங்கிலாந்தில் 1.5% குழந்தைகள் சோதனைக்குழாய் மூலம் பிறக்கின்றன.
இங்கிலாந்தில் 1.8% குழந்தைகள் உயிரணு தானத்தின் மூலம் பிறக்கின்றன.

செயற்கைக் கருத்தரிப்பு


சுக்கிலமோ கருமுட்டையோ
பக்குவத்தில் உதித்த கருவோ
வக்கணையாய் கருப்பையோ
அக்கறையாய்க் கடன்பெற்று
சூலகத்தில் உயிரூற்றிப் பின்
பாலகனைப் பெற்றெடுத்தல்.
- கவிஞர் காத்துவாயன்