நியூஸ் வே





அ‘சகுனி’ பிரணீதாவுக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. மற்ற மொழி வாய்ப்புகளுக்காக வலை வீசி வருகிறார். முயற்சியின் பலனாக தெலுங்கில் செகண்ட் ஹீரோயின் வாய்ப்பு மட்டுமே கதவு திறந்திருக்கிறது.

அஅடுத்த வருடம் காலேஜ் முடித்தவுடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் களத்தில் இறங்குகிறார். எந்த ஞாயிறையும் வீணாக்காமல் சண்டை, நடனம் என கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. கண்கள் சிவக்கப் பேசுவதை கற்றுத் தரவே வேண்டாம். அது இயல்பாகவே கேப்டன் வழி சொத்து.



அவயிற்றில் சுமக்கும் குழந்தையை வைத்துக்கூட அறம் செய்ய விரும்புகிறார் பாடகி ஷாகிரா. தன் குழந்தையை வரவேற்கும் விதமாக வாழ்த்து சொல்ல விரும்பும் ரசிகர்களுக்காக ஒரு இணையதளம் துவக்கியிருக்கிறார். ரசிகர்கள் அதில் பணம் செலுத்தி, பரிசுப் பொருட்கள் வாங்கி, பெயர் தெரியாத ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கலாம். எங்கோ ஒரு குழந்தை மலேரியா வந்து மரணமடையாமல் இருக்க கொசு வலை வாங்குவதற்கு 5 டாலர் தரலாம். 10 டாலர் கொடுத்தால் போலியோ மருந்து, 37 டாலர் கொடுத்தால் குழந்தைகளை எடை போடும் மெஷின் என வாங்கலாம். யூனிசெஃப் நிறுவனத்துக்காக இப்படி நிதி திரட்டுகிறார் ஷாகிரா.

அசிம்பு வீட்டில் தங்கைக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ‘‘இலக்கியாவின் திருமணத்திற்கு பிறகுதான் என்கிட்டே வரணும்’’ என கண்டிப்பாக சொல்லிவிட்டார் சிம்பு. அடடா, பாசமலர் அண்ணன் போலிருக்கே!

சைலனஸ



அபம்ப்ளிமாஸ் மாதிரி இருக்கும் மொத்து நடிகையை போட்டி போட்டுக்கொண்டு எல்லோரும் ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். ஆனால் டேக்கில் ரீயாக்ஷனை வரவழைப்பதற்குள் டைரக்டர்களுக்கு போதும் போதும் என்றாகிவிடுகிறதாம். ‘‘குஷ்பு, சிம்ரன், ஜோதிகா எல்லாம் எப்படியிருந்தாங்க!’’ என கண்ணீர் விடுகிறார்கள் டைரக்டர்கள். ஆனால் வசதிகளை கேட்டுப் பெறுவதிலும், சம்பளத்திலும் மட்டும் அம்மணி இறங்குவதில்லையாம்.

அமறைந்த நடிகரின் மகன், அழுக்கு கெட்டப்போடு பெரிய டைரக்டரின் படத்தில் நடித்தார். படம் இன்னும் வராவிட்டாலும் ஸ்டில்ஸ் மற்றும் நடிப்புத் திறனைப் பார்த்துவிட்டு புரொட்யூசர்கள் கால்ஷீட் கேட்டுப் போனால்... ‘‘ஸாரி, இப்போது கதை பற்றி பேசவேண்டாம். படம் வரட்டும், பார்த்துக்கொள்ளலாம்’’ என்று சொல்லிவிடுகிறாராம். படம் வந்ததும், ‘ஒன் சி’க்கு சம்பளம் பேசலாமே என்ற ஐடியாதான் காரணமாம்.

அகமலின் ‘விஸ்வரூபம்’ படத்தை வரவேற்று நடிகர் ஸ்ரீகாந்தின் ரசிகர் மன்றம் சென்னையெங்கும் போஸ்டர் ஒட்டியிருக்கிறது. மற்றொரு நடிகரின் படத்திற்கு போஸ்டர் ஒட்டி வரவேற்பது தமிழ் சினிமா காணாத புதுமை என்கிறார்கள்.



அஜெயப்பிரதாவின் மகன் சித்தார்த்தும் ஹீரோவாகிறார். ‘சத்யம்’ ராஜசேகர் இயக்கும் இப்படத்தில் ஹீரோயின் ஹன்சிகா. ஹீரோ புதுமுகம் என்பதால் யோசித்தவர், படா சம்பளம் என்றதும் உடனே கால்ஷீட் கொடுத்துவிட்டாராம். படத்துக்கு ‘வெல்லக்கட்டி எறும்பு’ என்ற டைட்டிலை யோசித்துள்ளதாக தகவல்.

அநயன்தாரா சென்னைக்கு வந்தால் ஹோட்டலில்தான் தங்குகிறார். ஆனால் மூணு வேளையும் வீட்டு சாப்பாடுதான். அதாவது, அண்ணா நகர் ஆர்யா வீட்டிலிருந்துதான் சாப்பாடு போகிறது. நயன்தாராவிற்கு இப்பொழுதெல்லாம் பிரியாணிதான் பிடிக்கிறது.

அமணிரத்னம் எப்போதும் கடிகாரம் கட்டிக்கொள்ள மாட்டார். டைம் தெரியவேண்டும் என்றால் பக்கத்தில் இருக்கிறவரிடம் கேட்டுத்தான் தெரிந்துகொள்வார். ஷூட்டிங் நேரங்களில் மட்டும் பேன்ட் பாக்கெட்டில் காந்தி வைத்துக்கொள்ளும் கடிகாரம் மாதிரி ஒன்று இருக்கும்.

வாய்ஸ்

அபத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெளியான தனது ரீ-என்ட்ரி படமான ‘தி லாஸ்ட் ஸ்டேண்ட்’ சரியாக ஓடாததால் வருத்தத்தில் இருக்கிறார் அர்னால்ட். ‘65 வயதில் ஆக்ஷன் ஹீரோவாக நடிப்பது சரியா?’ என விமர்சனங்கள் கிளம்பியுள்ள நிலையில், அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு சினிமாவுக்கு திரும்பவும் வந்தது சரியான முடிவுதானா என்ற குழப்பம் அவருக்கு வந்திருக்கிறது. வரிசையாக அவர் நடிக்கும் படங்களும் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

‘‘அவர் துடைப்பத்தை எடுப்பதற்குள், கூரை தாண்டி வழியுமளவுக்கு குப்பை சேர்ந்துவிடுகிறது!’’
- இந்திய பேட்டிங் வரிசையில் டோனி ஏழாவதாக வருவது பற்றி ரவி சாஸ்திரி

‘‘இந்தியப் பிரதமர் மீது கூடத்தான் நிறைய ஊழல் புகார்களைச் சொன்னார்கள். அவை எல்லாமே பெரிய பெரிய விவகாரங்கள்!’’
- பாகிஸ்தான் பிரதமர் மீதான ஊழல் குற்றச்சாட்டு பற்றி அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி

‘‘பலமுறை என்னை ஈவ்டீஸிங் செய்திருக்கிறார்கள். டெல்லியில் இது ரொம்ப சகஜம். சில சமயங்களில் பயந்து அழும் அளவுக்கு நடக்கும்!’’
- நடிகை சித்ரங்கதா சிங்