தத்துவம் மச்சி தத்துவம்





‘‘தலைவர் ஏன் டென்ஷனா இருக்கார்..?’’
‘‘அவரோட குற்றப் பத்திரிகையை டி.டி.எச்-ல ஒளிபரப்பிட்டாங்களாம்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

இ.பி. ஆபீசுக்கு போன் பண்ணி ‘கரன்ட் எப்போ சார் வரும்?’னு கேட்டா, ‘‘உன் மொபைல்ல இன்னுமா சார்ஜ் இருக்கு’’ன்னு கேக்கறாங்க... என்ன கொடுமை சார் இது!
- கரன்ட் எப்போ வரும்னு பல்பையே பார்த்துக்கொண்டு இருப்போர் சங்கம்
- ஜி.கோகிலா, ஆதலவிளை.

‘‘இருந்தாலும் நம்ம எம்.எல்.ஏவுக்கு தைரியம் ரொம்ப அதிகம்...’’
‘‘ஏன்... என்ன பண்ணார்?’’
‘‘நில அபகரிப்பு வழக்கு மாதிரி, தன் பதவியைப் பறிச்ச தலைவர் மேல வழக்கு போடமுடியுமான்னு கேட்கறார்!’’
- சா.இரா.மணி, வந்தவாசி.

நாம ஒரு பொண்ணை நோட் பண்ணலாம். ஆனால் காயின் பண்ண முடியாது.
- சைட் அடிக்கும்போது சில்லறைத்தனமாக யோசிப்போர் சங்கம்
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

‘‘ஆபரேஷன் தியேட்டருக்குள்ள டாக்டர் எதுக்கு சியர்ஸ் கேர்ள்ஸை நிற்க வச்சிருக்காரு..?’’
‘‘பேஷன்ட் அவுட் ஆனா அவங்க ஆடுவாங்க...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘பணம் கொடுத்துத்தானே ஆட்களைக் கூட்டி வந்தீங்க... அப்புறம் ஏன் நான் பேசும்போது அவங்க கைதட்டலை?’’
‘‘மனசாட்சி இடம் கொடுக்கலையாம் தலைவரே..!’’
- டி.சேகர்,திருத்துறைப்பூண்டி.

என்னதான் லாரி ஸ்டிரைக்கா இருந்தாலும், பேச்சுவார்த்தை முடிஞ்சா ஸ்டிரைக்கை ‘வாபஸ்’தான் வாங்க முடியும்; ‘வாலாரி’ எல்லாம் வாங்க முடியாது!
- டீசல் விலை உயர்வை எதிர்த்து அதிக விலைக்கு பெட்ரோல் ஊற்றி பெட்ரோல் வண்டி ஓட்டுவோர் சங்கம்
- கி.ரவிக்குமார், நெய்வேலி.